இழப்புகள்

உயிரோ

உறவோ

இழப்புகளின்

வலி

சதையயை தாண்டிய

உணர்வு.

கண்கள்

வானம் பார்க்கவில்லை ,

கால்களின்

தடம் பூமி

ஏற்க்கவில்லை.

ஏனோ

ஒரு குரல்,

தாயின்றி தவிக்கும்

நான்கு உயிர்கள்,

நான் அறிந்ததோ

இரண்டின் முகமே.

தாயின்றி

தாய் பாலுக்கு எங்கே

போவது,

கடும் குளிர்,

பசி

செயற்கை,

சேய்

ஏற்றுக் கொள்ளுமோ ?

என் கைகள்

சுகம் தரும்

வெப்பம் சலனமோ ?

நக கூர்மை

கூச்சம் தானே,

அதன் அணைப்பு ஒரு

புது உணர்வு தான்.

மெல்லிய

சத்தம்

மெய்பொருள்

அறிந்திடாது.

சில உறவுகள்

சிறுது நேரத்தில்

மனதோடு பிணைந்து விடும்,

ஒரு உயிர்

உறவாக மாறாத ?

பிறப்பிற்கு

அறிகுறியும் இல்லை

இறப்பிற்கு

காலம் போதவில்லை.

பிறந்து இறந்த

நான்கு பூனைகள்.

உணர்வோடு கலந்த

உயிர்களின்

இழப்புகள்

என்றும்

மனதில் பாரமே

)