அன்னையர் தினம்…

7 கடல்தூரம் இடைவெளி,

7 நாட்கள் பேசா இடைவெளி !

அன்னையர் தினம்,

இன்று !!

இருந்தும் பேசவில்லை ,

காரணம் தெரியவில்லை !

தொலைபேசியில் காசில்லை என்ற காரணமா ?

இல்லை

என் அன்பை காசில்லாமல் காமிக்க தெரியாத காரணமா ?

காரணத்தை யோசிக்கையில்

காதல் நிரம்பி கொட்டுகிறது.

உன்மேல் !

கொட்டிய காதலை உன்னிடம் கொட்ட பாத்திரத்தை தேடுகிறேன் ,

தென்படவில்லை !

காரணம் சிரிக்க காதல் அழுதது !

காதல் அழுக கவிதை பிறந்தது !!

கவிதையின் உருவம் காரணம் ,

அனால் உயிர் காதல் !

உயிரை இரும்பு பொட்டியில் பூட்டிய படி ,

உருவத்தை காமிக்கிறது இக்கவிதை !

காசு இல்லாமல் ,

காரணம் சொல்லாமல் ,

காதலை சொல்ல ,

அந்த பொட்டியின்

சாவியை தேடியபடி …….

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !

உன் அன்புள்ள மகன்