கிழக்கு முஸ்லிம்களின் கலைப்பின்னல் பாய்கள்

சாக்கீர்

அமர்தல், உறங்குதல் போன்றன மனிதனின் ஓய்வுக்கான அல்லது தளர்வான(relax) நிலைக்கான கொண்ணிலைகளாகும். இவற்றுடன் வணங்குதல், உபசரித்தல் போன்ற காரியங்களிற்கும் தரை விரப்புக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தூய்மை சுகாதாரம் என்பவற்றைத் தொணிக்கின்ற விரிப்புகளின் பயன்பாடு. சௌகர்யம், அழகு மற்றும் ஆடம்பரம் போன்றவற்றுக்காகவும் பயன்படுகின்றது. சுருக்கமாக கூறப்போனால் ஒரு கலைநயமிக்க வரிப்பு மேற்படி அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும்.

கலாநிதி அனஸ் அவர்கள் குறிப்பிடுவது போன்று காஸ்மிர் , வட இந்தியப் பகுதிகளில் கம்பளங்கள் (ஊயசிநவள) செல்வாக்குப் பெற்றிருப்பதைப் போல இலங்கை , தென்னிந்தியப் பிராந்தியங்களில் பாய்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன என்றும் அதற்கான காரணமாக கம்பளங்களுக்கான கலாச்சாரப் பிண்ணணியும், மூலப்பொருட்களும், சுவாத்தியமும் இங்கு பொதுவாக இல்லை என்கிறார்.

நீர்வளம் பொருந்திய நதி மற்றும் குளங்களின் வளம் பெற்ற எமது இலங்கைப் பகுதிகளிலும் பொதுவான விரப்பின் தேவைகளை நிறைவேற்ற பாய் விரிப்புக்கள் பயன்படுகின்றன. பன் மற்றும் ஓலைகளால் பின்னப்பட்ட இப்பாய்கள் முஸ்லிம் பெண்களின் கலைவண்ணத்திற்கு முக்கிய எடுத்துக்காட்டுகளாகும்.

முஸ்லிம் கிராமப்புறங்களில் குறிப்பாக கிழக்குமாகாண முஸ்லிம் பெண்கள் இக்கலைத்துறையில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருக்கின்றனர். இறக்காமம், கல்முனை, சம்மாந்துறை , மருதமுனை , அட்டாளைச்சேனை, நிந்தவூர் போன்ற பிராந்தியங்கள் பாய்களின் உற்பத்தித் தளங்களாக காணப்பட்டன.
இன்றைய காலங்களில் மட்டக்களப்பு என்ற பொதுபிராந்திய பெயரால் அழைக்கப்பட்ட இப்பகுதிப் பாய்கள் “மட்டக்களப்புப் பாய்கள்” என்ற வர்த்தக நாமத்தில் இன்றும் நாட்டின் வட பகுதி சந்தைகளில் கிராக்கியுடன் வினியோகிக்கப் படுகி;ன்றன. பாய் பின்னுதல், இழைத்தல் எனப்படுகின்றது.

முஸ்லிம் பெண்களின் குடிசைக் கைத்தொழிலாகவும், பொழுதுபோக்காகவும் காணப்படும் இந்நுண்கலையில் பன் பிடுங்குவதில் இருந்து, உலர்த்தி, சாயமூட்டி அவித்து, மீண்டும் உலர்த்தி , அரைத்து, பின்னுதல் வரை அனைத்து செயற்பாடுகளிலும் பெண்களின் செயற்பாடுகளே காணப்படுகின்றது.

சதுப்பு நிலங்களில் பன் புற்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. இவற்றினால் இழைக்கப்படும் பாய்கள் தேவையையும் அமைப்பையும் பொறுத்து பல வகைப்படுகின்றது

1. தொழுகைப்பாய்
2. கபன் பாய்
3. பள்ளிப்பாய் (ஸப்புப்பாய்)
4. மணடபப் பாய்( வரவேற்பறைப்பாய்)
5. படுக்கைப் பாய்
6. தோட்டுப்பாய்

7. மணவறைப்பாய்
8. கல்யாணப்பாய
9. புள்ளப்பாய்

பாய்களில் மேற்கொள்ளப்படும் அலங்காரப் பின்னல்களும் பலவகைப் பெயர்களைக் கொண்டுள்ளன.
1.கண்டாங்கி , பொருத்துப்புணி, தாமரைக் கொடி, இலுமிச்சங் கண்டாங்கி, தாராக்கால், மயிலிறகு, வீணைப்பெட்டி, அத்திப்பூ, மைக்கண் என பல வண்ணமிகு அலங்காரங்கள் காணப்படுகின்றன.

அன்றைய கால முஸ்லிம் கிராமப்புற வீடுகளில் பாய்கள் பாயசவு எனப்படும் ஊஞ்சலில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன . எலிகள் போன்றவற்றின் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதே முக்கிய நொக்கமாக இருந்தது.

பருத்திமனை

பாய்களை தயாரிக்க பன்புற்களை தட்டையாக அரைத்த எடுக்க வேண்டும் இதற்காக பருத்திமனை எனப்படும் உபகரணம் பயன் படுகிறது இதன் பொறிமுறை உருளைகளை எதிரெதிர் திசைகளில் சுற்றுவதன் மூலம் பன்கள் அகை;கப்படுகின்றன இவ்வுபகரணத்திற்கு உராய்வு நீக்கியாக ஆமணக்கெண்ணை பயன்படுகின்றது.

பாயிழைத்தல் இன்று அருகிவரும் இலங்கை முஸ்லிம் கலைகளுள் பெறுமதியானதொன்றாகும்

மூலங்கள்
கலாநிதி அனஸ், எஸ்.எம்.எம். இலங்கை முஸ்லிம் நாட்டாரியல்
கலாநிதி அனஸ், எஸ்.எம்.எம். இலங்கையில் முஸ்லிம்நுண்கலை
அல்ஹாஜ் ஜெமீல், எஸ்.எம்.எம்., கிராமத்து இதயம்
முத்துமீரான், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்.
நேர்காணல் இ.லெ. றுக்கியா உம்மா (50) சம்மாந்துறை
களப்பயணம் அல்லை சதுப்புநிலம்
Show your support

Clapping shows how much you appreciated இவண் சஞ்சாரி’s story.