Google I/O 2022தெரிந்த கொள்ள வேண்டிய செய்திகள் என்ன..
உலகின் மிகப்பெரிய தொழிநுட்ப நிறுவனமான கூகிள் நிறுவனத்தின் 2022 ஆண்டிற்கான Annual Developer Conference வருடந்தோறும் நடைபெறும்,அந்த நிகழ்வுல கூகிள் தங்களுடைய புதிய தொழிநுட்பங்கள், புதிய Products எல்லாம் அறிமுகம் செய்வாங்க.அதே போல இந்த வருடமும் நடைபெற்றது அதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
கூகிள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சைதான் நிகழ்வை முதலில் தொகுத்து வழங்குனார், இப்ப என்னென்ன புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்துனாங்க பார்ப்போம்.
Google Map
நாம் எல்லாரும் அதிகம் பயன்படுத்தும் கூகிள் Map ஒரு குறிப்பிட்டதக்க Updates கொண்டு வந்துருக்காங்க, அதாவது 3D Mapping இன்னும் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளை கொண்டு Mapsல இன்னும் அதிகமான இடங்களை கொண்டு வந்துருக்காங்க எப்படினு பார்த்தோம்னா இப்ப ஒரு இடத்தை தேடும் பொது அந்த இடம் மக்கள் அதிகம் வர இடங்களா இருந்த உடனே உங்களுக்கு அந்த இடம் தெளிவாக தெரியும், பக்கத்துல உள்ள சின்ன சின்ன இடங்கள் அவ்ளோவா தெரியாது இப்ப அந்த சின்ன சின்ன கட்டிடங்கள் எல்லாம் தெரியிறது போல கொண்டு வந்துருக்காங்க.
அதோட Europeல Eco Friendly Driving இப்ப நீங்க எதாவது ஒரு இடத்துக்கு செல்லும் போது இரண்டு வழிகள் உங்களுக்கு Mapsல Show ஆகும் அதுல உங்க Fuel Consume பண்றது போல route அதை தேர்வு செய்து உங்கள் எரிபொருளை மிச்சம் செய்து கொள்ளலாம்.
Pixel Watch And New Pixel Phone
கூகிள் நிறுவனம் தங்களோட முதல் Pixel Watch வெளியிட்டு இருக்காங்க,இதுல ஏராளமான Features அறிமுகப்படுத்தி இருக்காங்க உதாரணமாக சொல்ல போனால் உங்களோட Phone Connectivity இல்லாம Map access பண்ணலாம் அப்பறம் Google Wallet எல்லாம் பயன்படுத்தலாம்.
அடுத்து Pixel Smartphones 6a, 7 பிறகு 7 Pro போன்ற புதிய Smartphones அறிமுகப்படுத்திருக்காங்க எல்லாமே 5G தொழில்நுட்பங்களோட வருது அதோட அவங்களோட தயாரிப்புகளில அதிகம் Recycled பொருட்களை அதிகம் பயன்படுத்து தயாரித்து இருக்கறதா சொல்லி இருக்காங்க.
Pixel Buds
அடுத்து Pixel Buds அறிமுகம் செஞ்சு இருக்காங்க Active Noise Cancellation, Multi Connectivity இன்னும் ஏராளமான வசதிகளோடு அறிமுகம் செஞ்சு இருக்காங்க.
My Ad Center
பயனாளர்கள் தங்களுக்கு வரும் Ads Control பண்ணுற விதமாக My Ad Center ஒன்னு கொண்டு வந்திருக்காங்க இதன் மூலம் தங்களுக்கு வர கூடிய Adsல தங்களுக்கு பிடிச்ச Brands இருந்தது அதுல இருந்து அதிகம் Ads வருவது போல மாற்றிகொள்ள முடியும் அதேபோல தேவையில்லாத Ads தங்களோட Categoryல இருந்து நீக்கவும் முடியும்.
Google Translation Update
கூகிள் Translation 24 நான்கு புதிய மொழிகளை கூகிள் சேர்த்து இருக்காங்க இந்திய மொழிகள் அப்டினு பார்த்தோம்னா சமஸ்க்ரிதம்,போஜ்புரி போன்ற மொழிகள் அதில் இடம்பெற்று இருக்கு.
Google Wallets
தங்களுடைய முக்கியமான அடையாள ஆவணங்களை சேமித்து வைக்கிறது Google My Wallet அப்டினு ஒன்னு கொண்டு வந்துருக்காங்க இதை கொண்டு நாம எல்லா இடங்களிலும் கூகிள் Pay உதவியோடு Transaction பண்ண முடியும்.
AR Glass
கூகிள் அதோட புதிதாக Ar Glass ஒன்னு அறிமுகப்படுத்தி இருக்காங்க இது காது கேளாதவர்கள், அப்பறம் பிற மொழிகள் அறியாதவர்களுக்கு இது பெரிது உதவும் அப்டினு சொல்லியிருக்காங்க. எப்படினு பார்த்தோம்னா எதிரில் உள்ள நபர் உங்களிடம் ஆங்கில மொழியில் பேசுறாங்க அப்படினு வைங்க ஆனா உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது. இப்ப நீங்க அந்த AR Glass அனைத்து இருந்திங்க அப்டினா உங்களுக்கு அவர் பேசுறது எல்லாமே உங்களுக்கு தெரிந்த மொழியில Translate செய்யப்பட்டு Subtitles போல வரும் இதை கொண்டு நீங்க எளிமையாக அறிந்து கொள்ளலாம்.
இதை வீடியோ வடிவில் அறிந்துகொள்ள