Google I/O 2023

Mrbaiwriting
4 min readMay 11, 2023

--

கூகிள் நிறுவனம் சார்பாக வருடம்தோறும் நடைபெறும் Google I/O Event நேற்றைய தினம் உற்சாகத்திற்கு சற்றும் குறைவில்லாமல் நடைபெற்றது. இந்த Event துவங்கவதற்கு முன்னர் எல்லாரும் சொன்னது போலவே கூகிள் Aritificial Intelligence முழு கவனத்தை செலுத்தி இருக்காங்க நேற்றைய தினம் Event பார்த்தவங்களுக்கு எல்லாருக்கும் தெரிந்துருக்கும் வார்த்தைக்கு வார்த்தை AI, AI அப்டினு சொல்லிட்டே இருந்தாங்க, உண்மையா சொல்ல போனால் அவங்களோட எல்லா Productளையும் AI கொண்டு வந்துட்டாங்க இல்ல கண்டிப்பா கொண்டு வருவாங்க அப்டினு தான் சொல்லணும்.

அப்படி நேற்றைய தினம் நடைபெற்ற என்னென்ன முக்கியமான Update கூகிள் கொடுத்தாங்க அப்டினு இந்த பதிவில பார்ப்போம். நிறைய அறிவிப்புகள் இந்த பதிவில் குறிப்பிடாமல் இருக்கலாம் அல்லது நிறைய தவறுகள் இருக்கலாம். முடிந்த அளவு தவறில்லாமல் குறிப்பிடுகிறேன்.

Gmail Help Me To Write

நேற்றைய தினம் சரியாக 10:30 மணிக்கு இந்திய நேரப்படி Event துவங்கியது இந்த Event நாம் நேரடியாகவே Youtubeல் பார்க்கலாம். Event துவங்கியவுடன் கூகிள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை வந்து Intro கொடுத்தார், அதன் பிறகு AI பற்றி ஒரு சின்ன Intro அதன் பிறகு Event முடியும் வரை அந்த வார்த்தைக்கு ஓய்வே இல்லை, முதல்ல Gmail இருந்து துவங்குனாங்க அதில் AI எப்படியெல்லாம் பயன்படுத்தி இருக்காங்க அப்டினு இதற்கு முன்னர் நமக்கு யாராவது ஒருவர் Email அனுப்பினால் அதில் Reply செய்வதற்கு ஒரு சில Smart Replies இருக்கும் Like Thank You, அது போல ஆனால் இந்த தடவை Help Me to Write அப்டினு ஒரு Option கொண்டு வந்து இருக்காங்க கூகிள் இதை கொண்டு உங்களுக்கு யாராவது ஒருவர் Email அனுப்பினால் அதாவது ஒரு Flight Cancellation என்று எடுத்து கொள்வோம் இதை தான் நேற்று Eventளையும் எடுத்துக்காட்டாக சொன்னாங்க அதையே தான் நானும் இங்கு குறிப்பிடுகிறேன். அந்த Email அவங்களுக்கு Reply பண்ணனும் அப்டினு வைங்க இந்த Help Me To Write option Click பண்ணி அந்த Email நீங்க எப்படி Reply பண்ணனும் அப்டினு ஒரு Prompt Type பண்ணீங்க அப்டினா போதும் உங்களுக்கு Email Generate ஆகும், இதுலயே உங்களுக்கு Elaborate அது போல Option அதை கொண்டு உங்களோட Email Expand பண்ணிக்க முடியும்.

Google Maps Immerse View

அடுத்து Google Mapsல Immersive View கொண்டு வராங்க இதன் மூலமா நீங்க ஒரு இடத்துக்கு போறீங்க அப்டினா அந்த இடத்தோட வழிகளை சுலபமாக நாம் பார்க்க முடியும் Gameல உள்ள Maps போல அதோட அங்க இருக்குற Traffic அந்த இடம் என்ன தட்பவெப்பம் நிலவுது எல்லாமே தெரிந்து கொள்ள முடியும். இதை முதற்கட்டமாக 15 பெரிய நகரங்களுக்கு கொண்டு வராங்க அதில் ஏதும் இந்தியா நகரங்கள் இல்லை.

Magic Editor

Google Photosல ஒரு புதிய Editing Feature கொண்டு வந்து இருக்காங்க, இதன் மூலமா பல விதமான Editing Process பண்ண முடியும் எல்லாம் Ai உதவியோடு அதோட மட்டுமில்லாமல் ஒரு புகைப்படம் நீங்க எடுக்கிறிங்க அதில் ஒரு பகுதி இருக்கிறது அதையும் நீங்கள் Recreate பண்ண முடியும் முழு பகுதியாக.

Google Bard

அடுத்து Google Bard இதை பற்றி நாம ஏற்கனவே அறிந்ததது தான் இதிலும் ஒரு சில புதிய Updates கொடுத்து இருக்காங்க, அதுவும் நீங்க Developer ஆக இருந்தால் இன்னும் நன்றாகவே நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். 20+ Programming Languages Google Bardக்கு தெரியும். அந்த Event அவங்க கொடுத்த Promptக்கு Supera Code Generate பண்ணி கொடுத்துச்சு. அதோட மட்டுமில்லாமல் நீங்கள் Google Bard எதாவது ஒரு Code அல்லது வேற ஏதும் உங்களோட Work Related Content Generate பண்ணிட்டு இருக்கீங்க அப்டினா அதை நீங்க அப்டியே Google Docs மற்றும் Email Drafts மாற்றி கொள்ள முடியும். அதன் பிறகு Itnary Genration இது போல. அதன் பிறகு ஒரு நல்ல உபயோகமான Update ஒன்னு கொடுத்தாங்க அதாவது நீங்க Googl Bardல ஒரு Search பண்றீங்க எடுத்துக்காட்டாக சென்னையில் எந்த எந்த கல்லூரிகளில் Cyber Security Course இருக்கிறது என்று உடனே உங்களுக்கு அது தொடர்பான விபரங்களை தரும் அதோட மட்டுமில்லாமல் நீங்க Map Location கூட தரும் நீங்க கூகிள் Maps மூலமா பயன்படுத்திக்கலாம். அது மட்டுமில்லாமல் இந்த Dataவை நீங்க Google Sheet Table வடிவில் Migrate பண்ணிக்க கூட முடியும். அதோட நீங்க Images Generate பண்ணிக்க முடியும் இதற்காக Adobe நிறுவனத்தோடு கூகிள் இணைந்து இருக்காங்க.

Google Workspace — Duet AI

நான் மேல சொன்னது போலவே Google Workspaceல AI Integrate பண்றங்க இது மூலமா நீங்க Text, Images, Google Sheet , Google Slide இதுல உங்களுக்கு தேவைக்கேற்ப எல்லாவற்றையும் சுயமாக Generate பண்ணிக்க முடியும்.

Google Search — AI

Microsoft எப்படி தங்களோட Bing Search Engineல AI Intergrate பண்ணங்களோ அதே போல கூகிள் இப்ப பண்ணி இருக்காங்க நீங்க Bing AI Integration பிறகு பயன்படுத்தி இருந்திங்க அப்டினா உங்களுக்கு தெரிந்துருக்கு எதாவது ஒரு கேள்விகேட்டால் ஒரு சின்ன விபரங்கள் அதை பற்றி அதன் பிறகு அதோட Information நிறைய வரும் அதே போல கூகிள் கொண்டு வந்து இருக்காங்க. ஆனால் bing விட கூகிள் ரொம்ப Better ஆக இருக்கும்.

அடுத்து ஒரு உபயோகமான Update ஒன்னு கொடுத்தாங்க அதாவது Whatsapp Forward நிறைய வரும் பார்த்திங்களா Fake Photos அதெல்லாம் சுலமபாக Identify பண்ணும் விதத்தில் About This Image அப்டினு ஒரு Option கொடுத்து இருக்காங்க அதை கொண்டு இந்த Image ஒட Sources அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் ஓரளவுக்கு Fake News தடுக்க முடியும்.

Android

அடுத்து எல்லாரும் எதிர்பார்த்தது போலவே நேற்றைய Event கூகிள் அவங்களோட புதிய Phone Models மற்றும் Tablet வெளியிட்டாங்க, Pixel 7a மற்றும் Pixel Fold அதன் பிறகு Tablet அதோட எல்லாமே G2 Tensor Chip இதோட Spec பற்றி தெளிவாக வேற ஒரு பதிவில் பார்ப்போம். Pixel 7a , Tablet , Foldables ஒட Review வீடியோக்கு MKBHD, MRWHOSETHEBOSS Channel பாருங்க.

Find My Device

இதுல ஒரு புதிய Update கொடுத்து இருக்காங்க அதாவது உங்களோட Headphone, Tablet ஏதாவது மறந்து வேறு எங்காவது விட்டு வண்டிங்க அப்டினா ஆப்பிள் இருப்பது போலவே Nearby உள்ள Android Devices மூலமாக உங்களோட Things சுலபாகமாக கண்டுபுடிக்க முடியும். இதுவும் ஒரு நல்ல Update.

முடிந்தளவு நான் Cover பண்ணிருக்கேன், தனியா இன்னும் தெளிவாக தெரிய வேண்டிய விசயங்களை தனி தனி பதிவுகளில் பார்ப்போம். அதோட Google Bard Global Acces கொடுத்து இருக்காங்க உங்களோட Email பயன்படுத்தி Login Test பண்ணி பாருங்க எப்படி இருக்குனு.

மேலும் இது குறித்து தெளிவா அறிந்து கொள்ள கீழுள்ள வீடியோவை காணுங்கள்

--

--

Mrbaiwriting

You won’t be left empty handed after reading my articles