அந்த பாட்டியின் அந்த முகம் என்றும் மறக்காது …

“பாட்டி ..மல்லி ..என்ன விலை ?”

“25 !”

“25 ரூபாயா ?”

“ஆமாம் ப்பா …இன்னைக்கி பிள்ளையார் க்கு ஏதோ இதாம் ல !”

“சங்கடஹர சதுர்த்தி”

“ஆ…..அதான் “

“சரி , ஒரு முழம் தனியா கார் க்கு கைல ..கவர்ல மூனு முழம் .வீட்டுக்கு .”

“இந்தா கார் சாமிக்கு … “

அவர் அடுத்து கவர் எடுக்கும் வேலையில் .. பர்சை எடுத்து பணம் தேடும்போது தான் உணர்ந்தேன் — (வீட்டுக்கு தானே செல்கிறோம் , வழியில் வேறோன்னும் செலவு இல்லையே என்கிற நினைப்பில் ) ஒருவரிடம் கையில் பணம் இல்லையென்பதால், நான் மாற்றி வைத்திருந்த நூறு ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்டு வந்தேன் …

“இந்தா மூனு முழம் ..”

“பாட்டி …பணம் இல்லை ..ஒரு நிமிஷம் …”.என்று பர்சின் எல்லா வாயிலுகளிலும் தேட ஆரம்பித்தேன் …

“சரி வுடு …. அப்பறமா குடு …”

“இருங்க..இருங்க … “ என்று டேஷ் போர்டு உள்தொலாவிணேன் … ஒரு நோட்டு கண்ணில் பட , எடுத்தேன் .. எங்கோ எதுக்கோ வைத்திருந்த 500 ரூபாய் தாள் …

என் கையில் அதை பார்த்து …”அத்த குடு ..”

“இதையா ?”

“அதான் ..சில்லறை தர்ரேன் குடு …”

“பாட்டி …இது செல்லாதே ..”

“யார் சொன்னா ?” 
(கன்னத்தில் விழுந்த முதல் அறை அது )

“இல்ல பாட்டி ..இது …”

“குடுயா ..பேங்க் ல வாங்கிக்குறாங்க ..”
(இரண்டாவது அறை )

“ அது தெரியும் பாட்டி … கூட்டத்தில நின்னு மாத்தணுமே … கஷ்டம் ல …”

“ அதெல்லாம் ஒன்னியுமில்ல … ரேஷன் கடைய விட கூட்டம் கம்மி தான் ..”
(இது மூன்றாவது அறை …கொஞ்சம் பலமானது )

ஒரு நொடி திகைத்து போய் … அந்த பணத்தை நீட்டினேன் … உடனே சுறுக்கு பையிலிருந்து நான்கு நூறு ரூபாய் தாள்கள் எடுத்தார் … நான் சுதாரித்து கொண்டு …

“பாட்டி அதை வைங்க ..நான் அப்பறம் வாங்கிக்றேன் ..”

“ஏன் …புடி ..”

“பாட்டி அவனவன் இந்த ரூபாய மாத்த முடியாமல் தவிக்கிறான் …தெரியுமா ?”

“ஏன் என்னாத்துக்கு …”

“எல்லா இடத்துலயும் கூட்டம் ..க்யூ ல நிக்க வேண்டியதா இருக்கு ….மணிக்கணக்கா …நான் லாம் ரொம்ப நேரம் நின்னேன் “

“உங்களுக்கு லாம் கஷ்டம் தான் … …..கொஞ்ச நாள் தானாமே கூட்டமெல்லாம் , பொருத்துக்கோங்க ..நல்லது க்கு தானே ….எங்களுக்கு நிக்கிறது ஒன்னியும் புதுசு இல்லையே….” என்று ஒரு சிரிப்பு சிரித்தார் …

(இது தான் மிகப்பெரிய அறை …!!!!)

விழுந்த அறைகள் ஒவ்வொன்றும் பலமானவை …
விழுந்தது நிறைய பேரின் மேல் — என்னை போல கூட்டத்தை பார்த்து அலுத்துக்கொள்வோர் , ஃபேஸ்புக் போராளிகள் , சுயநலமாக தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் பேரில் வெறும் நெகடிவாக பேசுவோர் ..முக்கியமாக தாய் நாடே வேண்டாமென்று சுக வாழ்வு , காசுக்காக வேறெதோ ஒரு நாட்டை தாய் நாடாக ஏற்றுக்கொண்டு , ஆனால் நம் நாட்டு நடவடிக்கைகள் மீது வெட்டி நியாயம் பேசுவோர் ..இப்படி அனைவரின் மேலும் விழுந்த அரை அது !!!

70 ஆண்டுகால சுதந்திர இந்தியா வில் கறுப்பு பண ஒழிப்பு க்கு உருப்படியாக ஒரு அடி கூட எடுத்து வைக்க படாத இந்த நிலையில் , இந்த மிகப்பெரிய முடிவு .. ஏதோ கொஞ்சமேனும் மாற்றம் வரும் என்கிற எண்ணம் இருந்தாலும் …. அரசின் சரியான திட்டமிடல் இல்லாததால் நிறைய மக்கள் அவதி படுகிறார்கள் … ஆனால் அந்த அவதியை இந்த பாட்டி போல் சில பேர் எடுத்துக்கொள்ளும் விதம் தான் , பிரமிக்க வைக்கிறது … இந்த திட்டத்தை இன்று வரை நான் ஆதரித்தாலும் , வரவேற்த்தாலும் ..அதை செயல் படுத்திய விதம் , திட்டமிடல் சரியில்லை என்று எண்ணி வந்த எனக்கு … அன்றாடம் பூ வியாபாரத்தில் வயிற்றை கழுவும் எழுபது வயது மூதாட்டி சொல்லி தந்த பாடம் பெரிது …

இந்த களேபரங்களில் …பெரிய வியாபாரிகள் பழைய நோட்டுகளை வாங்க மறுத்துக்கொண்டிருக்க…

சிறு மளிகை கடை அண்ணாச்சிகள் … காய் கறிக்கடை , மீன் மார்கெட் அக்காக்கள் , மட்டன் ஸ்டால் பாய் அண்ணன் , சிறு சிறு உணவகங்கள் …இந்த பாட்டி போல் எத்தனையோ உயர்ந்த உள்ளங்கள் ஆங்காங்கே மக்கள் கஷ்டங்கள் அறிந்து பழைய ரூபாய் நோட்டுகள் வாங்கி வருகின்றனர் ……அவர்கள் ஒவ்வொருவரையும் சிரம் தாழ்ந்தி வணங்குகிறேன் …

அந்த பாட்டியின் அந்த முகம் என்றும் மறக்காது …
மழை வருடா வருடம் ஒன்றும் சும்மா பெய்யவில்லை !!

படித்ததில் ரசித்தது….

Like what you read? Give #Muthupandian (μ) a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.