எல்லைக்குட்பட்ட வானம்…

நீங்கள் தந்ததாய்

அறிவித்திருக்கும்

எல்லையற்ற சுதந்திரத்தின்

எல்லைகள்..

வெகு நேர்த்தியாக

மறைக்கப்பட்டிருக்கின்றன..

.

தவறென்றும்..

தவிர்த்திருக்கலாமென்றும்..

எல்லைகள் தன்னிருப்பை

உணர்த்தும் நொடியில்..

சுருங்கித்தானே போகிறது

உங்களின்

அந்த எல்லையற்ற வானம்..

.

தொடுவானத்தில்..

அழகை மட்டுமே

ரசிக்க பழக்கிவிடுவதின்..

பின்னொரு

மாய எல்லையை..

எத்தனை நேர்த்தியாக

நிறுவியிருக்கிறீர்கள்..

உறுத்தவே விடாமல்..

.

யார் கண்டது..

கடல் தொடுமிடத்திலும்..

தூரத்து மலைமுகட்டின் உச்சியிலும்..

அந்த வானம்..

முடிந்தேகூட போயிருக்கக்கூடும்!