குரூரத்தின் கேள்விகள்..
கேள்வியில் வழிந்தோடும்..
உங்களின் குரூரத்தை
மறைக்கத்தான்..
எத்தனை மெனக்கெடுகிறீர்கள்..
சொற்களை அலங்கரித்தும்..
இடம்மாற்றியும்..
உழண்டு உழண்டு..
பேறுகால பசுபோல
மிகவும் அவஸ்தைப்படுகிறீர்கள்..
பின்..
பிறிதொரு சந்தர்ப்ப புள்ளிக்கு
கேள்வியை ஒத்திவைத்துவிட்டு
தோளில் கைப்போட்டு
புன்னகைத்தபடி உடன் நடக்க..
மெல்ல..
குரூரம் தன் கோரப்பல் தெரிய..
சிரித்தபடி..
தாண்டவமாடத் தொடங்குகிறது!!