நினைவுகளின் வெறுமை…

ஏன்?

எதற்கு?

என்ற கேள்விகள்..

நிசப்த சுவரில்

எறிந்த பந்துகளாக மோதி

கிழே விழுகின்றன..

கதவிடுக்கின் வழியாக

நுழைந்த

நிழல் பூதங்களாய்

நினைவுகள்..

நாக்கு துறுத்தியபடி

சுவரில் கூடி

கோரத்தாண்டவமாடுகின்றன..

.

கனவுகளைக் கொன்ற

நிதர்சனங்களின்

பல்லிடுக்கில் வழியும்

ரத்த வாடை அறையெங்கும்..

.

முறைத்தபடி..

அறையின்

குறுக்கும் நெடுக்குமாக

அலையும்

இருளின்

குற்றம்சாட்டும்

பார்வையை தவிர்த்து..

கண்மூடி

அசையாது கிடக்கின்றேன் நான்..

.

மீட்டெடுக்கவே

முடியாத

இழப்புக்களின் நினைவுகள்

மூச்சடைக்கும்..

இந்த

இரவைக் கடக்க..

உறக்கமோ

மரணமோ

ஏதோவொன்று..

சீக்கிரமாக வரட்டும்!!