பேருந்து குறிப்புகள்

நகர வாழ்க்கைக்குள் நுழைந்து பல வருடமாகியும் இன்னும் கிராமத்தான் மனது சற்றும் மாறவில்லை.

இந்த மாநகர் பேருந்து பயணத்தின் 965 சிரமங்களில், எனக்கு மிகச்சிரமம் பெண்கள்.

முதலில் இத்தனை பெண்களை பெண்களை அவர்களின் நகர் நாகரீக உடைகளை பார்க்க மனம் மகிழ்ந்தது, இப்போதும் தான்.

ஆனால் அவர்கள் என்னருகில் நின்றாலோ,இருக்கையில் அமர்ந்தாலோ அங்கே தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.

அவர்கள் அருகில் வந்த முதல் நொடி கிராமத்தான் கண் விழிக்கிறான். அவர்கள் சகஜமாய்த்தான் இருக்கிறார்கள் நமக்கு தான் கை நடுங்க ஆரம்பிக்கிறது.

கொஞ்சம் கூட இடிக்காமல் உட்கார வேண்டும் என்பதே நான் மொத்தமாய் செய்யும் பகீரதப்பிராயத்தனம்.

திருப்பம், வேகத்தடை,போக்குவரத்து என பேருந்து குலுங்க 100 சந்தர்ப்பம் பேருந்தில் அத்தனை சந்தர்ப்பத்திலும் அவர்கள் மீது படாமல் இருக்க பேருந்தை விட குலுங்கி தொலைகிறேன்.

இதற்கே இவ்வளவு என்றால் அவர்கள் என்னிடம் பேச்சு கொடுத்தால் முடிந்தது.

“டிக்கட் எடுங்க ”என அவர்கள் சொல்லும்போது என் திரு திரு விழிப்புகளை அவர்கள் உற்று நோக்கினால், என்னை திருடன் என நினைக்க 101% வாய்ப்புண்டு.

இது அத்தனையும் தாண்டி என் தேவதையின் சாயலில் எதேனும் ஒரு பெண் எல்லா பேருந்திலும் இருக்கிறாள்,அது ஒன்றே என் மகிழ்ச்சி.
நான் பார்க்கும் அத்தனை பெண்களுக்கும் உங்கள் பெயர் தான் ஜீவிதா — மஞ்சள் வெயில்
One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.