காதலுடன்..
கொஞ்சம் காத்திருக்கிறேன்..

காதலை அடைகாத்தவாறு
கனவுகளுக்கு உரமிட்டபடி
இதயச்சுவர்களுக்கு
உன் நேசத்தின் வர்ணங்களால்
நிறந்தீட்டிக்கொண்டே
நிம்மதியான நித்திரை நடுவில்
முத்தமிடும் மீசை போல
மனசைக் குறுகுறுக்க வைக்கும்
உன் குறும்புகளை மீட்டியடிபடி
இதமான நினைவுகளுக்குள்
என்னை இழந்து கொண்டே
இனிப்பினை சுவைத்து ருசிக்கும்
சிறுபிள்ளை போலே
உன்னை உனக்காய்
உறுதியாய் காதலித்துக்கொண்டு
என்னை மறந்து
எதிலும் உன்னை உணர்ந்தபடி
கெஞ்சல்கள், கொஞ்சல்கள்
கண்மூடி திளைத்திருக்கும்
கள்ள முத்தங்கள்
கொள்ளையிடும் உன்
குறும்புச்சிரிப்புகள்
கிள்ளைகளால்
காதல் செய்யப்போகும்
கிண்ணாரத் தருணங்களென

அத்தனை ஆசைகளையும்
அட்சயப்பாத்திரத்திற்குள்
அடைத்துவைத்தபடி
உனக்காய் என்னை
தயார்படுத்தியவாறு
உன்னோடிருக்கப்போகும்
மிச்ச நாட்களை
உருவகப்படுத்தி மகிழ்ந்துகொண்டே
இன்னும் கொஞ்ச நாள்
உனக்காக
கொஞ்சம் காத்திருக்கிறேன்..

Image courtesy : Google
