மெதுவாய் நெளியும் 
பூங்கொடி போலவே
காதல் போதையேறிக்கிடந்த 
அத்தருணத்தில்
அரவமின்றி உள்நுழைந்தாய்

நள்ளிரவின் கதவுக்குப்பின் 
ஏதோ பல சிந்தனைகளின் புடைப்பில் 
எதார்த்தமாய் நெளியும் எண்ணங்களில்
ஏமாந்திருந்த சந்தர்ப்பத்தில்
மலைப்பாம்பு போல 
மறைந்து வந்து 
உன் மனசின் கசடுகளை 
விஷக்கங்குகள் போல் கக்கிச் சென்றாய்

இருட்டின் கருத்த பின்னணியில் 
விழியோர நீர் கசிய 
விசித்து அழுதபடி
மல்லாந்து படுத்திருக்கையில்
கோர நாக்கு கொண்ட
கூர் வாளின் முனையால்
மேலிருந்து எக்கி 
இதயத்தை இரண்டாய் பிளந்து
மரணத்தின் வாசத்தை காட்டிச்சென்ற நீ
இறக்கும் போதே அறிந்து கொண்டேன்
பூநாகமென..


பூநாகம்..

சங்கீதா பாக்கியராஜா..

Show your support

Clapping shows how much you appreciated Sangeetha Packiyaraj’s story.