கடவுள்..


இருக்குதென்பர்,
இல்லையென்பர்,
இறந்தபின் தெரியும் என்பர்.
இருக்கும் போது தெரியாத எதனையும்
இருக்குதென்று எண்ணும் வழக்கமில்லாததால்
இருந்தால் இருக்கட்டும்
என்னை தொல்லை பண்ண வேண்டாம் என்று
பகுத்தறிந்து என் பாதை வழி செல்கிறேன்..