“ யாரேனும் சாப்பிட அழைப்பார்களா ?பழையது ஏதேனும் மிஞ்சுகிறதா ?”என்று தேடி அலையும் கண்கள் ,பசியின் கயிற்றைப் பிடித்தபடி ஊஞ்சலாடுகின்றன.
ஒரு மாலையின் ஊடலுக்குப்பின் உதிக்கும் இரவு,இருளைவிட மௌனங்களாலே நிரப்பப்படுகின்றது.
பேச முற்பட்டுஅடுக்கப்பட்ட வார்த்தைகளை,மனம், தன் கரங்களாலேகாகிதங்களைப்போல் கசக்கி எறிகின்றது.
நேற்றைய பிற்பகல் மழையில்நான்காம் தள ஃபிளாட்டுக்குகடவுள் வந்திருந்தார்.
வந்தவர்,க்ரீன் டீயோடு நிறுத்திவிட்டு"யார் தயாராக இருக்கின்றீர்கள் ?" என்றார்.
மாலையில் வீடு திரும்பிய பெண்ணிடம் ஆண் கேட்டது,"இன்றைக்கு உன் வேலை எப்படி?"
"கடினமாக ஒன்றுமில்லை.ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட சீட்டுகளுள் இருந்து ஒன்றை எடுத்துத் தர வேண்டும்.ஏதோ வழிபாட்டுத்தெய்வங்களின் புகைப்படங்களாம்.நாம் அவற்றை வழிபடக்கூடாதா என்ன…
இன்றைய நாளுடன் ஒப்பிடுகையில்அவை வெறும் கிறுக்கல்கள் தான் .
என்றோ மகிழ்ந்திருந்த நினைவுகளை,சிலந்திவலைகள் சிறைகொண்டுள்ளன பத்திரமாய் .