வாழ்வு எனும் மாயை
Aug 25, 2017 · 1 min read

கடினமான பாதைகளையே நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் அல்லது கடினமான பாதைகள் உங்களை தேர்ந்தெடுக்கின்றன…
அதிகபட்ச இன்னல்களை சந்திப்பது நீங்கள்தான் என்று உறுதியாக நம்பும் உங்களால் அதிகபட்ச இன்பங்களை சந்தித்ததும் நீங்கள்தான் என்று உறுதியாக நம்ப இயலவில்லை…
எப்போதும் நடிக்கும் உங்களால் உங்கள் செயல்களில் எது நடிப்பு எது நிஜம் என பிரித்தறிய முடியவில்லை, மற்றவர்களை எங்ஙனம்…
வாழ்வின் அற்புதமான பொக்கிஷ நினைவினூடே ஒரு விஷநினைவும் சேர்ந்தே மீள்கிறது, சம்பந்தங்களின் கண்ணியை உடைக்க முடிவதேயில்லை…
இன்னும் உடையவில்லை நீங்கள், உடையும்வரை அடிப்பேன் என்கிறது வாழ்க்கை, உடைந்துவிட்டீர்களா இதோ சற்று ஓய்வெடுங்கள் மீண்டும் அடிக்க வருவேன்…
