இதயம் தவிழும் அவள் இதழின் அழைப்பில்,

இருளும் மயங்கும் அவள் கண் மை வரைகையில்.

நிலவொளியில் மின்னும் அவள் கன்னம் சிவக்கையில்,

நிறங்கள் பழகினான் அவள் மன்னன் திண்ணையில்.

காற்றின் ஓசை கேட்டு திரும்பியவள்,

காதலின் ஆசையில் மலர்ந்தாள்.

கம்பன் பாடிய சீதையை போல்,

அவள் தோன்றி அவன் கண் பறித்தாள்.