பரீட்சயின் போது தவிக்க வேன்டிய 12 விடயங்கள்-from ISR

பரீட்சையினை வெற்றிகரமாக செய்ய வேண்டுமாயின் அதனை நன்கு திட்டமிடல் வேண்டும். பரீட்சையின் போது அதனை ஒழுங்காக செய்வதன் மூலம் அதிக மதிப்பெண்களை பெற்றுக் கொள்ள முடியும்.

பின்வரும் 12 விடயங்களை பரீட்சையின் போது தவிர்ப்பதன் மூலம் சிறப்பான் சித்தியை பெற முடியும்.

1) வினாக்களை ஒழுங்காக வாசிக்காமல் பிழையாக விளங்கிக் கொள்ளல்.

2) இலகுவான வினாக்கள் இருக்க கடினமானதை தெரிவு செய்தல்

3) கேட்கப்பட்ட வினாவுக்கு விடயளிக்காமல் எதிர்பார்த்து வந்த வினாவுக்கு விடையளித்தல் ( ஒரே தலைப்பு)

4) பரீட்சையின் போது மண்டபத்தில் உள்ள மற்றவர்கள் செய்வதை அவதானித்துக் கொண்டிருத்தல்

5) சிறிய கேள்விகளுக்கு அதிக நேரம் ஒதுக்குதல்

6) கேள்விகளை தெரிவு செய்ய நேரம் ஒதுக்காமல் உடனடியாக விடை எழுத ஆரம்பித்தல் பின் இடையில் வினாத் தெரிவில் தடுமாறுதல்

7) கணித்தல்களில் இறுதி விடை பெறுவதற்கு அதிக நேரம் செலவழித்தல் (பொதுவாக கனித்தல்களில் இறுதி விடைக்கு குறைவான புள்ளிகளே வழங்கப்படுகின்றன)

8) விடை தெரிந்த வினாக்களில் முதலில் கவனம் செலுத்தாமல் மற்றைய வினாக்களில் கவனம் செலுத்துதல்

9) ஒவ்வொரு வினாவுக்கும் திட்டமிட்டு நேரம் ஒதுக்காதிருத்தல்

10) Ruler, pen, pencil என்பவற்றை கொண்டு செல்லாதிருத்தல்

11) பரீட்சை பற்றிய எதிர்மறையான எண்ணங்களை கொன்டிருத்தல்

12) பரீட்சை மண்டபத்திற்கு தாமதமாக சமூகமளித்தல்

எவ்வாறு பரீட்சைக்காக தயாராகுவது முக்கியமோ அதேயளவு பரீட்சை நுட்பங்களை தெரிந்து கொள்வதும் முக்கியமானதகும்.

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.