Raja KS
Raja KS
Sep 5, 2018 · 1 min read

என் முதல் ஆசிரியை என் அம்மா எங்கள் வீட்டு கதவை கரும்பலகையை.

மாற்றி ஒரு குவளை சாதத்தை கையில் வைத்து அன்னையாகவும் , ஆசிரியையாகவும் மாறியவள்.

நர்சரி பள்ளி, தொடக்க பள்ளிகள் மீது பயம் களைந்து விருப்பத்துடன் பள்ளி செல்ல. காரணமானவர்கள் இருவர் திருமதி.செல்லம்மா , திருமதி.ஈஸ்வரி காலம் முழுவதும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.

இப்படி தமிழில் சரளமாக கட்டுரைகள எழுத காரணமான எனது தமிழ் ஆசிரியியை (ஹேமாவதி) , அறிவியலில் ஆர்வம் ஏற்பட திருமதி. ஜானகி டீச்சர்.

வரலாற்றையும் , அரசியலையும் (civics ) வெறும் புத்தக பாடமாக போதிக்காமல் அதன் மேல் இன்று வரை ஈர்ப்பு குறையாமல் படிக்க உதவிய திருமதி.சாந்தா , வசந்தா டீச்சர்.

ஒரு உதவாக்கரையை

இன்று

ஒரு உதவும்கரை ஆக்கி

இச்சமூகத்தில் பொறியாளனாக கட்டமைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

September 5.

Radhakrishnan Birthday

#TeachersDay 👩‍🏫. 👨‍🏫