அமிர்தமே!!

அருமையின் அமிர்தமே!

அழகின் அட்சயமே!!

உன் கண் கொண்டு

காட்டிய வித்தை யெல்லாம்

விதையாய் விழுந்தது என் இதயத்தினுள்!

வெள்ளை சிரிப்பால் என்

உயிரை வெளுக்க செய்து

மேகத்தினுள் இடைசெருகள் செய்தாயடி!

என் உயிர்ழூச்சின் உயிரோவியமே!

என் கண் தேடும் காவியமே!

படைத்தவன் படைத்துவிட்டான்

என் பாக்கியம் உன்னை என்னிடம்

காட்டி வைத்தான்!

கடை பார்வையில் என்னை கலங்கடித்து

கிறுக்கனாய் சில கிறுக்கல்கள்

செய்ய வைத்தாயடி!

மந்திரகாரியே மாற்றம் பல தந்து

மனம் விட்டு போகா மாயகாரியே!!

ஒட்டிய உறவாய் ஒன்றாய்

பிணைந்து விட்டாயடி!!

தங்க தாமரையே! என்னுள் தவழும் என் தவமே!

கைபிடித்து வா! என் உயிர்ழூச்சாய் காலம் கடந்திட!!!….