அருள் வழியில் நிற்கும் வழிமுறை

ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல
 வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
 தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
 ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே. — (திருமந்திரம் — 659)

விளக்கம்:
 சிவபெருமானின் அருள் வழியில் நிற்க விரும்புவர்களுக்கு திருமூலர் சொல்லும் வழிமுறை இதுதான். மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியை சுழுமுனை வழியாக தலை உச்சிக்கு கொண்டு செல்வது, பிங்கலை இடைகலை வழியாக மூச்சுப்பயிற்சி செய்வது, இப்பயிற்சியினால் ஏழு உலகங்களையும் தாங்கி நிற்கலாம் என்னும் உண்மையை உணர்வது ஆகியவையாகும்.


Originally published at திருமந்திரம்.