கேசரி யோகம்

Rie
Jul 31, 2023

கட்டக் கழன்று கீழ்நான்று விழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்ட மிருக்க நமனில்லை தானே — 799

விளக்கம்:
இப்பாடல் கேசரி யோகத்தின் முதல் பாடலாகும். கேசரி என்றால் சிங்கம் என்று பொருள். சிங்காதன நிலையில் இருந்து செய்யும் யோக முறைகளைப் பற்றி இந்த அத்தியாயம் பேசுகிறது.

முழந்தாளிட்ட நிலையில் அமர்ந்து, உடலைத் தளர்ந்து விடாமல் நேராக நிறுத்தி வைக்க வேண்டும். பின்னங்கால்களால் குதத்தின் வாயிலை அடைத்து நிமிர்ந்து அமர்ந்தால் மூலாதரம் என்னும் அடுப்பை அணை கட்டலாம். இவ்வாறு உடலை நிலைநிறுத்தி யோகம் செய்பவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள், அவர்களுக்கு மரணம் துன்பம் தருவதாக இருக்காது.

அட்டம் — முழங்கால், அடுப்பு — மூலாதாரம்

Originally published at திருமந்திரம்.

--

--