அஸ்தமனம்

சீனாவில் அஸ்தமனம்
சில்லியில் உதயம்
மனிதபுலனுக்கெட்டிய உணர்ச்சித்தோற்றமது

ஆகாயச்சூரியனுக்கோ
அஸ்தமனம் கிடையாது

இப்புவியைத் தாண்டியும் நீடிக்குமது
சுழன்று கொண்டு
எரிந்து கொண்டு

உனக்கும் கூட முடிவுண்டு
என் சூரியனே
பிரபஞ்சத்தோடு கறைந்திடு
இல்லை
பிரபஞ்சத்தை உன்னுள் அடக்கிடு

-டினு

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.