ATM security — எங்க ஊரு முதலாளி

#Feb17,2017,

நான் ஒவ்வொரு முறையும் ATMல் பணம் எடுக்க செல்லும் போதும் , அங்கு வேலைபார்க்கும் செக்யூரிட்டி , அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சென்று மறைந்து கொள்வது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. முதலில் நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சென்றமுறை, Money Refill பண்ண Van வந்த போது நான் அங்கு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது , இந்த செக்யூரிட்டி, Bank staff பலமுறை கூப்பிட்டும் வெளிய வர தயங்கினார். கடைசியாக வெளியே வந்தபோது எனக்கு அதிர்ச்சி. அது “Royal Enfield” மூர்த்தி அண்ணா.

“மூர்த்தி அண்ணா” என்றேன். கண்களில் தரைதாரையாக கண்ணீர், “பணம் வைத்தவுடன் வாங்க, போங்க சார்”.

“அண்ணா” என்றேன், மீண்டும் “போங்க சார்,பணம் வைத்தவுடன் வாங்க” என்றார் கண்ணீருடன்.

Model Image.

#1990 நான் சிறுவனாக இருந்த போது, எனது கிராமத்தில் 20 Acre நிலத்தில் விவசாயம் செய்தவர்,”Royal Enfield Classic” வைத்திருந்தவர்.

கம்பீரமாக விவசாயம் செய்து வாழ்ந்த மனிதர், இன்று ATM வாயிலில் காவலாளியாய். பார்க்க மனமில்லாமல் அப்படியே வீட்டுக்கு சென்று விட்டேன். இரண்டு நாட்கள் கழித்து, அவரை எனது வீட்டிற்கு சாப்பிட அழைத்து செல்லலாம் என அங்கு சென்றபோது, அவர் அங்கு இல்லை.
வேறு ATM க்கு மாறுதலாகி சென்றதாக சொன்னார்கள்.

ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியோடு வீடு திரும்பினேன் :(