நகையில்லா திருநங்கை

ஆண் பாத்திரமா?
பெண் பாத்திரமா?
எதுவாய் இருந்தாலும் இந்த கதாபாத்திரம்..
யேந்துவது வெறும் கை பாத்திரம்..

ஊமை கொட்டி விழிக்கும் பெரும் ஜனமே..
இவர்களுக்கும் உண்டு சீறும் மனமே..
கண் விழித்தால் மட்டும் போதாது வாய் திறக்க வேண்டும்
ஓ மனித இனமே..
இவர்களுக்கு உள்ளதும் மனித குணமே..

கை தட்டி பாடுவார்கள் இனிய காணம்..
நாம் தலை கொட்டி வைத்ததால் தொலைதூரம் இவர்களின் தொடுவானம்..

இவர்களுக்கு குறுநகையும் இல்லை..
சிறு நகையும் இல்லை..
இவர்களுக்கென்று தனி கதையும் இல்லை..
இந்த உடல் வெரும் சதையும் இல்லை..

உலகம் எனும் பெரும் தடம்..
இவர்கள் கேட்பது சிறிதே இடம்..
தனித்து நிற்கும் மனத்திடம்..
அதை தான் கற்க வேண்டும் நாம் இவரிடம்..