எசமானிசம்

இருவிதை பிஞ்சினை காப்பாற்ற..,

நான்கு கால் பிள்ளைகளை
ஏறினில் மூட்டினோம்..!

மண் முட்டிய விதை கண்டு..,
வியந்து நின்றோம்!

களையெடுத்து களிப்படைந்தோம்..!

அன்னந்தண்ணி அற்று..,
அறுவடை செய்தோம்..!

பருத்தியின் சிரிப்பில்..,
பகல்நிலா கண்டோம்!

வியர்வை சிந்தி..,
வேர் பிடுங்கினோம்..!

வீசிய தென்றலிடையே
ஒரு மின்னல்கீற்று...

நில்! நகராதே நில்!

கூலிக்கு மாரடிக்கும் கயவனே..!
குனிந்து நில் குயவனே!
பஞ்சம் பிழைக்கவந்த
பன்றி கூட்டமே..!
பத்தடி தள்ளி நில்!
இங்ஙனம் நானே!
பலன் அடைந்த முதலாளி..!

ஆலையில் செக்கிழுக்கும்
காளையும் நீயும் ஒன்றே!

சத்திமிட்டது முதலாளித்துவம்!

Selvasudar Duraipandian

Written by

Common Man with mixed feelings

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade