பட்டதாரிக் குழந்தை
என் முதலும் கடைசியுமாய் இருக்கிறவன்.
எனது பெயரில்கூட..,
பாதியை பகிரும் அளவிற்கு..,
எனக்கு சமமானவன்..!
எனக்குள் முழுமையாய் நிறைந்திருப்பவன்.
முட்டிய மார்பு முதல்..,
முழுக்கைச் சட்டைவரை..,
அனைத்திலும் ஒன்றே..!
அணியும் ஜட்டிக்கு மட்டும் விதிவிலக்கு..!

சரிக்கு சமமாய்
கைகளில் சூடுபோட்டு கொண்டோம்..!
மண்வீடு மண்டபங்கள் கட்டி..,
பக்கத்து வீட்டு தோட்டத்தில்..,
பகல் முழுக்க விளையாடினோம்..!

வயிறு கிள்ளினால் தாயை சுற்றவான்..!
காலனா காசு கிள்ளினால் தந்தையை சுற்றுவான்..!
தூங்கினாலும் பண்டங்களை மோப்பம் பிடிப்பான்..!
ஆயிரம் ரூபாய் பண்டத்தையும்..,
அரை நொடியில் தீர்க்கவள்ள..,
குட்டி அரக்கனவன்..!
அவனுடைத்த முன்பற்களை..,
அடிக்கடி தொட்டு பார்க்கிறது..,
என் நாக்கு..!
உடைந்த என் பல்லினை சாணியில் உருட்டினாய்..,
பால்பண்ணை கூரையின்மேல் பாஸ்பரஸ் குண்டு போல் வீசினாய்..!

நானடித்த பந்தெல்லாம் சாக்கடையில் சாயம் போகுமுன்.,
கூச்சநாச்சமின்றி குனிந்து எடுத்தவன்..!
ஈன்றவளோ! மயில் இறகினும் இலகிய மனமுடையவள்..!
அவ்வப்போது..!
காளி அவதாரம் எடுப்பாள்..,
காரணம்..,
இந்த குறும்புக்கார குள்ளனே..!
பிறர்க்கு உதவியென்றால்..,
உலகைக்கூட திருப்புவான்..!
உழைப்பென்றால்..,
எறும்பிடம் கூட போட்டியிடுவான்..!
அழகில் அம்மையை போலும்..,
அறிவில் ஆச்சியை போலும்..,
குணத்தில் அய்யனை போலும்..,
மூன்றெட்டை கடந்த வயதிலும்..,
என்னவோ..!
எனக்கு குழந்தையாகவே தெரிகிறான்..!
தலைமுறைகள் தளைத்தோங்க..,
கல்வி ஆயுதம் ஏந்திய கயவன்..!
நமக்கு முன் இப்போது..,
பட்டதாரியாக..,
பொறியியல் பட்டதாரியாக..!

வாழ்த்துகள்
திரு. அறிவுச்சுடர் துரைப்பாண்டியன் B.Tech
முனைவர் பட்டம் மூன்றுகல் தொலைவே..!
முந்திக்கொண்டு வா..!
