இந்தி திணிப்பு!

1965! தமிழகம் அதுவரை கண்டிராத மாபெரும் போரட்டத்தை கண்டது. இனிமேலும் இப்படி ஒரு ஒருங்கிணைந்த போராட்டம் தமிழகத்தில் சாத்தியமா என தெரியாது. 500 க்கும் மேற்பட்டோர் தன் உயிரை மாய்த்து பெற்றுத்தந்த இந்தி திணிப்பிற்கு எதிரான விடுதலை அது.

இந்த எதிர்ப்பு இந்தி தினிப்பிற்க்கானதே தவிர இந்தி எதிர்ப்பு அல்ல அதாவது இந்தி படிக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது ஆனால் தமிழ் நாட்டில் அனைவரும் இந்தி படிக்க வேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.

இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த போரட்டத்தின் காரணங்களை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தியா முழுவதும் இந்தி திணிக்கப்பட்டிருந்தால் மத்திய அரசு சம்மந்தப்பட்ட தேர்வுகள் இந்தியில் எழுதும்படி இருந்திருக்கும் அதாவது பலர் தங்கள் தாய் மொழியில் தேர்வு எழுதுவார்கள் மற்றவர்கள் ஒரு புது மொழியை கற்று அதில் எழுத வேண்டும். இது இந்தியை தாய் மொழியாய் கொண்டவர்களுக்கு ‘unfair advantage’ தானே? பல மத்திய அரசின் உத்யோகங்களுக்கு இந்தி புலமை தேவையாய் இருந்திருக்கும் இதனால் அனைத்திலும் வடநாட்டவர்கள் ஆதிக்கம் செலுத்தும்படி இருந்திருக்கும்.

தமிழ்நாட்டில் இருந்து வடக்கே செல்பவர்கள் வெகு சொற்பமே. அவர்களுக்காக முழு தமிழ்நாடும் ஏன் இந்தி படிக்க வேண்டும்?

இந்தி திணிப்பை ஆதரிக்கும் பலர் கூறும் ஒரே காரணம் ‘link language’. அதற்குதான் ஆங்கிலம் இருக்கிறதே. உலகத்தோடு உறவாட ஆங்கிலம் தேவை.

வீட்டில் சின்ன நாய் பெரிய நாய் என இரண்டு இருந்தால் சின்ன நாய்க்கு சின்ன கதவும் பெரிய நாய்க்கு பெறிய கதவுமா வைப்பார்கள்? அப்படித்தான் இருக்கிறது ஆங்கிலம் இருக்கும்போது இந்தி கட்டாயமாக்கபடுவது.

ஓரேடியாக திணிப்பது தடுக்கப்பட்டாலும் படி படியாக மத்திய அரசு திணித்து வருகிறது.

இதில் வேடிக்கையே இந்த எதிர்ப்பிற்கு கட்சி சாயம் பூசப்பட்டு அதனால் இந்தி திணிப்பை சிலர் ஆதரிப்பதுதான். இந்தி திணிப்பிற்கான எதிர்ப்பு 1937ல் திமுக உருவாவதற்கு முன்பே தொடரப்பட்டு இன்று வரை நடந்து கொண்டிருப்பது.

இதில் வடவர்கள் நம்மை தமிழ் ‘chauvinist’ என சொல்வதுதான் வேடிக்கை!

ஒவ்வொரு மாநிலத்தை பற்றியும் கூகுளில் அதிகமாக தேடப்பட்டது இதோ.

இப்பொழுது யார் chauvinist?

ஜன நாயக உரிமையை நிலைநாட்ட நடக்கும் இப்போராட்டாங்களை ஆதரிக்காவிட்டாலும் கேலி செய்யாமலாவது இருக்கலாம்.