ஜிமெயில் - அனுப்பிய மடலை தடுத்தாட்கொள்வதெப்படி ?

ஜிமெயிலில் அறிமுகப்படுத்தியிருக்கும் Undo Send (அனுப்பிவிட்ட மடலை தடுத்தல்) வசதி பற்றி ஒரு சிறிய அறிமுகம். சில நேரங்களில் நாம் அனுப்பிய மடலில் ஏதாவது தவறு நேர்ந்துவிட்டது என்று கொள்வோம் (இணைப்பை சேர்க்க மறந்துவிட்டீர்கள் / கை தவறி Send பொத்தானை அழுத்தி விட்டீர்கள் / உங்கள் மேலாளரை கண்ணாபின்னாவென திட்டி மடல் எழுதி விட்டீர்கள்) - பிறகு அடடா இந்த மடல் இப்போது அனுப்பக்கூடாது என்று முடிவெடுக்கிறீர்கள். அந்தோ பரிதாபம். உங்கள் மடல் ஏற்கனவே சென்றுவிட்டது..உங்களுக்கான ஆப்பை அடுத்த முனையில் இருப்பவர்கள் கூர் தீட்ட கத்தி அனுப்பிவிட்டீரே, கத்தி !!!

மைக்ரோசாப்ட் அவுட்லுக் வைத்திருப்பவர்களுக்கு ஒரு ரிவர்ட் வசதி கொடுத்திருப்பார்கள் (அது 90 சதவீதம் வேலை செய்யாது என்பது வேறு விஷயம்). இப்போது ஜிமெயில் அந்த வசதியை பொதுமக்களுக்கு வழங்கி இருக்கிறது. (ஏற்கனவே சோதனை வசதியாக இருந்துவந்தாலும், இப்போது முழுமையாக அனைவருக்கும் வழங்கி விட்டது). அதை பற்றிய ஒரு சின்ன விளக்க பதிவு தான் இது…

முதலில் எப்படி இதை எனேபிள் செய்வது என்று பார்ப்போம்..

  1. உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்துகொள்ளுங்கள்.
  2. அங்கே மேலதிக வேலைகளை செய்ய உதவும் பொத்தானை அழுத்தவும்.

3. அந்த பொத்தானை அழுத்திய பிறகு வரும் செட்டிங்ஸ் என்ற பொத்தானை தேர்வை செய்யவும்

4. உங்கள் செட்டிங்ஸ் விரிவடையும். இதில் ஜெனரல் செட்டிங்ஸ் (முதலில் உள்ள ஆப்ஷன்) - உங்கள் ஜிமெயில் தமிழில் இருந்தால் அதற்கு தகுந்த வார்த்தை வரும். அங்கே அண்டோ செண்ட் என்ற வசதியை தெரிவு செய்துகொள்ளவும். அங்கே பத்து வினாடி, இருபது வினாடி என்று இருக்கும் இடத்தில் உங்கள் விருப்பப்படி வைத்துக்கொள்ளவும். (நான் 30 வினாடி வரை வைத்துள்ளேன்). நான் ஒரு ஸ்லோ பிக்கப்…

5. இப்படியே விட்டால் இந்த வசதி உங்களுக்கு கிடைத்துவிடாது. இந்த விஷயத்தை சேமிக்கவும் வேண்டும். மவுசை கீழே உருட்டி (அல்லது கீழே போகும் அம்புக்குறியை அழுத்தி கீழே சென்று Save சேஞ்சஸ் அல்லது சேமிக்கவும் என்ற பொத்தானை அழுத்தவும்.

இப்போது இந்த வசதியை நீங்கள் பெற்றுவிட்டீர்கள். இனி இதை சோதித்து பார்க்கலாமா ?

6. ஒரு மின்னஞ்சலை உள்ளீடு செய்துகொள்ளுங்கள். உங்களுடைய மின்னஞ்சலையே To பெட்டியில் கொடுக்கலாம், அல்லது உங்கள் பிரியமான எதிரியின் மின்னஞ்சலை கொடுத்து நோகடிக்கலாம். நான் ஒரு உலக எழுத்தாளருக்கு சோதனை கடிதம் எழுதி இருக்கிறேன்..

7. இப்போது அனுப்புக (Send) பொத்தானை அழுத்தினால், மின்னஞ்சல் சென்றுவிடும். ஆனால் உங்களுக்கு இன்னொரு வசதியும் பார்வையில் தெரியும்.

8. இந்த undo பொத்தான் நீங்கள் ஏற்கனவே தேர்வு செய்துள்ள மணித்துளிகள் வரை உங்கள் பார்வையில் இருக்கும் (எனக்கு 30 வினாடிகள் வரை).

இனி நீங்கள் அந்த பொத்தானை அழுத்தினால், உங்கள் மின்னஞ்சல் அனுப்பியவருக்கு போகாமல் மீண்டும் திறந்துகொள்ளும்.

நல்ல வசதி, நன்றி பத்ரி. (பதிவை எழுதியவர் டிவிட்டர் கணக்காளர் ஸ்வீடன் ரவி @senthazalravi)

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.