கடலை மாவு பாயசம்
Sep 6, 2018 · 1 min read
தேவையான பொருட்கள்:
கடலை மாவு ஒரு கப்
சர்க்கரை இரண்டு கப்
பாதாம் 50 கிராம்
முந்திரி 50 கிராம்
ஏலக்காய்த்தூள் சிறிதளவு
நெய் கால் கப்
பால் அரை அல்லது ஓரு லிட்டர்
செய்முறை:

பாதாம் மற்றும் முந்திரி மிக்ஸியில் போட்டு ஒன்று இரண்டாக உடைத்து கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்ததும் நெய் விட்டு கடலை மாவை நன்கு வறுக்கவும்.பின் அதனுடன் அரைத்த பாதாம் மற்றும் முந்திரி சேர்த்து நன்கு கிளறி பின் அதனில் அரை லிட்டர் பால் சேர்த்து நன்கு கிளறி கெட்டி பட ஆரம்பித்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி ஏலக்காய்த்தூள் சேர்த்து சேர்ந்து கொதித்து கெட்டியாகும் போது இறக்கவும். இன்னும் பால் தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளலாம்.