சம்பா ரவை கேசரி


ஒரு டம்பளர் சம்பா ரவைக்கு ஒண்ணேகால் டம்பளர் வெல்லம் சேர்த்து கொள்ள வேண்டும். முதலில் சிறிது நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து கொள்ளவும். பிறகு அரைமூடி துருவிய தேங்காயை வறுத்து கொள்ளவும். அடுத்து ரவையை வறுத்து கொள்ளவும். மூன்று டம்பளர் தண்ணீரை வாணலியில் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு அதில் வெல்லம் சேர்த்து கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும். பிறகு மீண்டும் கொதிக்க விட்டு தளதளவென கொதிக்கும் போது ரவையை போட்டு நன்கு கிளறவும். தட்டு போட்டு மூடி வைக்கவும். நன்கு வெந்ததும் வறுத்த முந்திரி, வறுத்த தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும். ஏலக்காய் தூள் செய்து போடவும். இறக்குவதற்கு முன் நெய் ஊற்றி கிளறி இறக்கவும். சுவையான சத்தான சம்பா ரவை கேசரி தயார்.