ராகி ஊத்தப்பம்

Shanthi Umashankar
Jul 20, 2017 · 1 min read

ஒரு பேசனில் ராகி மாவு ஒரு கப்,ஓட்ஸ் அரை கப், கோதுமை மாவு அரை கப், உப்பு மற்றும் மோர் சிறிது சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.காரட் துருவி கொண்டு, வெங்காயம், கொத்தமல்லி தழை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.அடுப்பில் தோசை கல்லை போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி தேய்த்து பின் இந்த மாவை சிறிதாக ஊற்றி அதில் காரட் வெங்காயம் கொத்தமல்லி தழை பச்சை மிளகாய் மேலே தூவி எண்ணை விட்டு நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு தட்டில் எடுத்து பரிமாறவும்.

)