ராகி ஊத்தப்பம்
Jul 20, 2017 · 1 min read

ராகி மாவு ஒரு கப் எடுத்து ஒரு பேசனியில் போட்டு கொள்ளவும்.அதனுடன் அரை கப் ஓட்ஸை போடவும்.பிறகு அரை கப் கோதுமை மாவு சேர்த்து சிறிது மோர் விட்டு உப்பு சேர்த்து கரைத்து தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.காரட், வெங்காயம், கொத்தமல்லி தழை மூன்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.காரட் துருவி வைக்கவும்.தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் இந்த மாவை சிறிதாக ஊற்றி அதில் காரட், வெங்காயம், கொத்தமல்லி மூன்றையும் தூவி எண்ணை விட்டு நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு தட்டில் எடுத்து பரிமாறவும்.