ராகி பெசரட் தோசை


பச்சை பயறு அரை கப் எடுத்து பத்து மணி நேரம் ஊற வைக்கவும்.ஊற வைத்துள்ளதில் மூன்று பச்சை மிளகாய், சிறிது இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.அரைத்து வைத்தள்ளதில் அரை கப் ராகி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.பெருங்காயத்தூள் சிறிது சேர்த்து கலந்து கொள்ளவும்.வெங்காயம் சேர்த்து கொள்வதாக இருந்தால் வார்க்கும் சமயம் சேர்க்கவும்.அடுப்பை பற்ற வைத்து அதில் தோசை கல்லை போட்டு எண்ணெய் ஊற்றி தேய்த்து காய்ந்ததும் மாவை ஊற்றி அதில் எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு தட்டில் எடுத்து பரிமாறவும்.