ஐபோன்கள் சென்னைக்கு ஏற்றதல்ல, ஏன்?

சென்னைக்கு (இந்தியாவுக்கு) ஏன் ஐபோன் தேவையில்லை என்பது பற்றிய எனது நாலணா.

1. திருட்டு — மிக அதிகமாக திருடப்பட்டு விற்கப்படும் போன்களில் ஐபோன் தான் முதன்மையானது. துபாய் போல நான் இங்கே, ஐபோனை பொது இடங்களில் கைப்பையை விட்டு எடுக்க அஞ்சுகிறேன். அறிந்து கொண்ட விஷயங்கள் அப்படி :( புற நகர்ப்பகுதிகளில் முக்கிய்மான கொள்ளை ஐபோன் வைத்திருப்பவர்கள் மீதுதான் நிகழ்த்தப்படுகிறது.

2. செயலிகளின்மை — பெரும்பான்மையான முக்கிய அரசு / அரசு சார்ந்த / அன்றாட வாழ்வியலுக்கான செயலிகளை முதலில் ஆண்ட்ராய்டில்தான் வெளியிடுகிறார்கள். ஐபோன் டெவலப்பர்கள் கண்டுகொள்வதில்லை. ஆகவே கையிருந்தும் முடவ்னாய் இன்னும் கார்டுகளை எடுத்துக்கொண்டுதான் போய்க்கொண்டிருக்கிறேன். (உதாரணம் : TNPDS, M AADHAR etc.)

3. விலை — ஒரு ஐபோனின் தோராய விலையென்பது மிடில் கிளாசின் கிட்டத்தட்ட ஒரு வருட அன்றாடத்தேவைகளுக்கான பணம். அவ்வளவு பணமே வருமானத்திற்கு மீறி வந்தாலும் ஐபோனில் போடும் மிடில்கிளாஸ் மன நிலை வருவதேயில்லை என்பதுதான் நிதர்சனம்.

4. சூடு — நீங்கள் கார் வைத்திருக்கவில்லையென்றாலோ, உங்களுக்கு தினமும் 4–5 மணி நேரம் வரை வெளியில் வேலையிருக்கிறதென்றாலோ ஐபோன் ”நான் சூடாகிவிட்டேன், என்னை அணைத்துவிடு” எனும் அலறுதலைக்கேட்கலாம். எனக்கு கடந்த கோடைக்காலத்தில் இரண்டு முறை ஓவர் ஹீட் என்று தானாக அணைந்துபோனது :( சூடு இல்லாத சென்னையைக்கனவிலும், சில மழை நாட்களிலும்தான் காண முடியும். இல்லையா?

ஆகவே, சென்னைக்கு ஏற்ற போன் விலை குறைந்த ஸ்மாட்ர்போன்களே என்று கூறி…..

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.