அந்த மழை நாட்கள்
Jul 24, 2017 · 1 min read
விழித்து தயாரான பின் விடுமுறை அறிவிப்பு வரும் — தூங்கியே இருக்கலாம் எனத் தோன்றும்,
வாரம் ஒருமுறையே வரும் கேம்ஸ் பீரியட்டில் மழைக் கொட்டி, கணித ஆசிரியைக்கு சாதகமாக அமையும்,
வெள்ளைச் சீருடையில் ஒட்டிய சேற்றுக்கரையால், அம்மாவிடம் திட்டுவிழும்,
வகுப்பினுள் நுழையும் மழைச்சாரல் புத்தகம் நனைக்கும், வீசும்காற்று ஒன்றாக அடுக்கி வைத்த புத்தகங்களை கலைத்யெறியும்,
மழையில் நனையாதிருக்க இடம்மாறி அமர்ந்தப்பின்,
மழைக்காற்றையும் மழைச்சாரலையும் ஒருங்கே ரசித்தப்படி வகுப்பில் அமர்ந்து பாடம் கவனித்த(!) அந்நாட்கள் …

மாலையில் வீடுத் திரும்புகையில் லேசாக மழைத்தூர வேணுமென ஏங்கிய நாட்கள் ,
மழையினால் மின்வெட்டு ஏற்படினும் கவலைக்கொள்ளா நாட்கள்,
மழையில் நண்பர்களுடன் விளையாட சென்ற நாட்கள்,
மழை ட்வீட்டுகளின்றி மழையை மழையுடனே ரசித்து மகிழ்ந்த நாட்களவை!! ☺
