ஜல்ஜல் என்ற சப்தத்துடன் வண்டி

எங்கள் வீட்டின் முன் நின்றது

மாம்பழ கலரில் பட்டு புடவையில்

பட்டு வேட்டியில்

ஒரு நடுவயது பெண்மணியும்

இரண்டு ஆண்களும் இரங்கினார்

அம்மா ஒடி வந்து வரவேற்றார்

கூடத்தில் அமர்ந்தனர்

“போடி அந்த புடவையை கட்டி

க்கொண்டுவா என்றார்

இப்பொழுது புரிந்தது

நானும் எட்டி பார்த்தேன்

எல்லாரையும் எனக்கு நன்றாகவே தெரியும் என்ற ஒரு உணர்வு

என்னவர் தான் என்னை

வைத்த கண் வாங்காமல்

பார்த்தார் ஏன் நானும் தான்

என் மாமியார் என் கை பிடித்து

தன்னுடன் சேர்த்து உக்காரவைத்தாள்

பிடித்ததா என்றார்

தயங்காமல் ஆமாம் என்றேன்

அவரோ தன் கட்டவிரலை

உயர்த்தினார்

இவ்வளவு தான்நடந்தது