அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?

நான் அலுவலகத்தில் ஆங்கிலம் பேச தெரியாமல் அசிங்கப் பட்ட காலம் அது…

(இப்பவும் எனக்கு ஆங்கிலம் பேச தெரியாது ஏனா அசிங்கப்படுறது பழகிடுச்சு;)

அப்போது நம் அலுவலகத்தில் பணியாற்றும் என் தூரத்து தமிழ் நண்பர் ஒருவர் அமெரிக்க ஆய்வு(onsite) பயணத்தை முடித்துவிட்டு சென்னைக்கு வந்திருந்தார்…

அவர் என்னை அலுவலகத்தின் தரை தளத்தில்(Ground floor) சந்திக்க அழைத்தார், நானும் வெளிநாட்டு சாக்லேட்களுக்கு ஆசைப்பட்டு சந்திக்க சென்றேன்(அது தான் நான் செய்த பெரிய தவறு)

இனிப்புக்காக நடந்த அந்த சந்திப்பு எனக்கு ஒரு கசப்பான அனுபவமாக மாறிப் போனது:(

இரண்டாவது தளத்தில் பணிபுரியும் நான் தரை தளத்திற்கு சென்றேன், என்னை தூரத்திலேயே அடையாளம் கண்டு அவர் கையசைத்தார்!

‘எவ்வளவு நல்ல மனுஷன்:)’ என்று அவரை நோக்கி நடந்தேன்…

நான் அருகில் சென்றவுடன் அந்த கொடுமையான கேள்வியை கேட்டார்:(

‘What’s Up?’

அவர் முகத்தில் இருந்த புன்னகையை வைத்து…

என்னிடமிருந்து ஒரு நல்ல பதிலை எதிர்பார்த்து தான், ஏதோ கேட்கிறார் என்று தெரிந்து கொண்டேன்

அனால் அந்த கேள்விக்கான சரியான பதில் எனக்கு புலப்படவில்லை:(

உடனடியாக ஆங்கிலத்தில் ஒரு பதில் சொல்லவில்லை என்றால் அவமானமாக போய்விடும் என்று ‘மைக்ரோ’ நொடி பொழுதில் சிந்தித்து, அவர் சிரித்தாலும் பரவாயில்லை என்று இந்த புத்திசாலித்தனமான பதிலை சொன்னேன்…

‘First floor’

என் ஆள் காட்டி விரலை மேலே காட்டியவாறு…:D

அந்த நொடியிலிருந்து இன்று வரை என்னிடம் அவர் தமிழில் மட்டும் தான் பேசுகிறார்:)

அவருக்கே இங்கிலீஷ் மறக்கிற அளவுக்கு…

அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?

வெளியில் விசாரித்து பார்த்ததில் அந்த கேள்விக்கான அர்த்தம்

‘என்ன விசேஷம்?’ என்பதாம்!

ஏ வெள்ளக் காரன்களா… யார ஏமாத்த பார்க்கிறிங்க, அப்டினா இங்கிலிஷ்ல

‘What’s the Celebration?’ தான வரணும்!!

நீங்க வெள்ளையா இருந்தா நீங்க என்ன சொன்னாலும் நாங்க ஏத்துக்கணுமா?

நான் சொன்ன பதில் கரெக்ட் தான், ஆனா கேட்கப் பட்ட கேள்வி தான் தப்பு:P

இப்ப சொல்லுங்க…

What’s Up?