அல்வா — தமிழ் புத்தாண்டு பெசல்

அல்வா கொடுத்து ரெம்ப நாளாச்சு!

அல்வா கிண்டுறதுக்கு காரணம் எதுக்கு, கரண்டி இருந்தா போதும்!!

திடீர்னு ஏன் அல்வா நியாபகம் வந்துச்சு?

போன வாரம் எல்லோருக்கும் கெடச்சிருக்கும், எனக்கும் கொடுத்தாங்க அல்வா!

நாம வாங்கி சாப்பிடுற அல்வாவ விட… நாமலே கிண்டி மத்தவங்களுக்கு கொடுக்கிற அல்வா சுவைக்க அலாதி, மத்தவன் கஷ்டபடுறதில அவ்ளோ சந்தோசம்…ம்ம்ம்ம்

கெட்ச அல்வாவ ஜீரணிக்க முடியாம இந்த வார இறுதி நகர்ந்தது. சரி வெளில தல காட்ட முடியாது, ஏன்னா நானே சும்மா இருந்தாலும் கண்டிப்பா ஏதாவது ஒரு நாயி நம்ம வாய புடுங்கும், சரி அந்த விசயத்துல இருந்து வெளிய வர ஏதாவது பண்ணனும்னு ஒரு கலை வெறி!

அல்வா கிண்டலாம்னு முடிவு பண்ணேன்! அடுத்து என்ன அல்வா கிண்டலாம்?

காரட்டும் இருந்துச்சு, பீட்ரூட்டும் இருந்துச்சு!

காரட்டுல பண்ணா ஒரு கலர் வரும், பீட்ரூட்டுல ஒரு கலர் வரும்… நான் ஒரு தனி ரூட்டுல போய் ரெண்டையும் சேர்த்து பண்ணா என்ன கலர் வரும்?னு பார்க்க ஆசைப் பட்டேன்!!

எத செய்ய போறேன்னு சொன்னாலும்…

புதுசா இருக்கே?

நான் கேள்விப்படல??

இது நல்லா வருமோ???ன்னு

எதிர்மறை கேள்விகளை கேட்டுக்கிட்டே என் கூட தங்கி இருக்கிற மங்க்கி
ரூம்ல எங்க இருந்தாலும் கூப்பிடாமலே எகிறி குதிச்சு வருவான்!

அவன விரட்டுரதுக்கு ஒரே வழி(ரி) தான் இருக்கு,

‘இந்த காய்கள கொஞ்சம் வெட்டிக் கொடேன்’

யாருக்குமே கேட்காத அவன் அலைபேசி சிணுங்கல் அவனுக்கு மட்டும் கேட்கும்!

‘மச்சான், ஒரு அஞ்சு நிமிசுத்துல வரேன்’னு போறவன் தூங்கி எழுந்து மறு ஜென்மத்துல தான் வருவான்!! அதுவும் திங்குறதுக்கு மோப்பம் பிடிச்சிட்டு!

‘போய் தொலடா சங்கி மங்கி’,

அப்போ தான் தெரிஞ்சுது பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் “தொணை”க்கு ஆள் வைக்கலன்னு

வரலாற்றில கண்டுப்பிடிப்புகள் எல்லாமே விபத்து தான், செய்ய போற அல்வாவும் அப்படி தான்!
அந்த காய்கள பிரிட்ஜ்ல இருந்து வெளிய வைக்கிறதுக்கு முன்ன… அதுக்கு ஒரு பேரு வச்சேன்!

பீட்ரட் அல்வா!!!

ஆமா இது கம்ப சூத்திரம், பீட்ரூட்ல இருந்து ‘Root’ட உருவிட்டேன், காரட்டுல ‘car’அ உருட்டிவிட்டிட்டு மிச்சத்த ஒன்னு சேர்த்து வச்சது தான் பீட்+ரட்… பேரு வைக்கிறதுக்கே இவ்வளவு ஆராய்ச்சி பண்ணேன்!

செய்முறை யோசிக்க மூளைய கசக்காம, பல வலைபதிவுகளில அல்வா கிண்டி பார்த்தேன்!

https://www.youtube.com/watch?v=yksRZGYpvJc

நம்ம “வா ரே வா” செப்பு சொல்றத கேட்டு செய்யுறதுன்னு முடிவு செஞ்சேன்!!

அவங்க சொன்னதில பாதி காரட்டுக்கு பதிலா, பீட்ரூட் சேர்த்து ஆராய்ச்சிய தொடர்ந்தேன்!!

ஒரு மணி நேரம் கழிச்சு…

கரண்டிய வச்சு கிண்டிக்கிட்டே கண்ண மூடி, பார்முலா-வ தொடர்ந்து சொல்ல ஆரம்பிச்சேன்!
“நான் கிண்டுறது அல்வா தான்! நான் கிண்டுறது…”

நான் சொன்ன மாதரியே “அல்வா” வாசம் வந்துச்சு! சும்மாவா கிண்ட ஆரம்பிக்கும் போதே, கிண்டி எடுத்த
நெய் பாட்டில் காலி!

வாசமும் வந்துச்சு, அடுப்பாங்கரை வாசல் வழியா வாசம் பிடிச்சு அந்த அரை ட்ரவுசர் போட்ட “அறை”கிறுக்கணும் வந்தான்!!

சரி இவனுக்கு கொடுத்து சோதிச்சு பார்க்கலாம், பிரச்னை என்னன்னா இவன் என்னத்த கொடுத்தாலும் நல்லா இருக்கன்னு திம்பான்!!!

நானே முதல சாப்பிட்டு பார்த்தேன், நல்லா தான் இருந்துச்சு!!!
நம்பிக்கை வீண் போகல, பொறுமையும் வீண் போகல!!!

அவன் அந்த பாத்திரத்த பார்த்த பார்வை பதற வச்சது, அப்படியே வச்சா அதுக்குள்ள தலைய உள்ள வுட்டு அல்வாவ கேடுத்துடுவான்னு… பத்திரமா தட்டுல எடுத்து கொடுத்தேன்!
தின்னு பார்த்துட்டு… “மச்சி இதுக்கு என்ன பேரு”ன்னு ஆர்வம்மா கேட்டான்!

“பீட்ரட் அல்வா”ன்னு சொன்னேன்

“மச்சி ‘அ’ல்வா இல்லடா ‘ஹ’ல்வா”ன்னு திருத்தி சொன்னான்!

அல்வாவுல ஏதாவது குறை இருந்து சொல்லி இருந்தா கூட பரவா இல்ல… இவன, சும்மா விட கூடாதுன்னு முடிவு பண்ணேன்!

இவனுக்கு தலைவர் கவுண்டமணி பாணியில பதில் சொன்னா தான் சரிப்பட்டு வருவான்!

“டேய் இங்க வா… நான் உனக்கு வெளக்கம் சொல்றேன்! அல்வாவ கையில எடுத்துட்டு உன் வாய எப்புடி துறக்கிற”

“அ”ன்னு பதில் சொன்னான்!

“’அ’ன்னு தான துறக்கிற…. அதுக்கு மட்டும் ‘அ’ வேணும், பேருல ‘ஹ’ இருந்தா தான் ஏத்துக்குவீங்கலோ?

இதோ பார், இந்த ஈர வெங்காயமெல்லாம் எனக்கும் தெரியும், அப்படியே சப்புகொட்டி சாப்பிட்டுட்டு ஓடி போய்டு, பேருல திருத்தம் பண்றேன்னு வாய்ய துறந்த… கரண்டிய காய்ச்சி வாயுல விட்டு கிண்டி போடுவேன், படுவா…”

அல்வாவ வாய துறக்காம சாபிட்டுட்டு போய் திரும்பவும் படுத்துட்டான்!

எனக்கு அல்வா கிண்டி கொடுத்த திருப்தி இருந்தாலும்…

கூடவே அதை நானே சுவைக்க ஒரு தயக்கம் இருக்குது!!

மீதி அல்வா பிரிட்ஜ்க்கு உள்ள தூங்குது, அல்வா துண்ணது வெளிய தூங்குது… எது முதல காலாவதி ஆகும்னு தெரில!

நான் சாப்பிட காத்திட்டு இருக்கேன்!

தூங்குனவன் காலையில ஆவியாகாம “ஹா”ன்னு கொட்டாவி விட்டு எழுந்திருக்கிறவரை…

Like what you read? Give Suryaprakash Rajendran a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.