என்னது… இந்தியாவுக்கு சுதந்திரம் கிடச்சிருச்சா?

அமெரிக்கர்கள் சுதந்திர தினத்தை(july 4) சிறப்பாக கொண்டாடும்

அதே நேரத்தில் அவனுக்கு…

வருமானம் ஈட்டி தரவும்

தன் மானம் கெட்டு

முதுகை வளைத்து

உழைக்கிறான் இந்தியன் :(

ஞாயிற்று கிழமையும் சேர்த்து :(:(

திடீர் கொதிப்புக்கு காரணம்:

இந்த வாரம் வார இறுதி நாட்கள் அலுவலகத்திற்கு அவசியம் வர சொல்லிவிட்டார்கள் :(

என் கேள்வி:

இதே போல் இந்திய சுதந்திர தினத்தை நாம் கொண்டாட…

ஒரு அமெரிக்க வாழ் இந்தியன் ஞாயிறு அன்று வேலை செய்வானா?

உங்கள் கேள்வி:

‘ அப்புறம் எதுக்கு நீ இந்த வேலைக்கு வந்த?’

ஆங்…

என்னைய அமெரிக்க NASAவில கூப்ட்டாஹ… (ராக்கெட் பறக்கும் போது இடையில நின்னு போச்சு-னா இறங்கி தள்ளுற வேலை)

நிலாவில பீட்சா கடை வைக்க கூப்ட்டாஹ… (ஏற்கனவே தான் பாட்டி வடை சுட்டு விக்கிறாங்களே)

நாம படிக்கிற இயந்திரத்தனமான கல்வி முறைக்கு…

வெளி நாட்டு காரனுக்கு கும்புடு போடுற வேலை தான் கிடைக்கும் :(

இந்த ஊர்ல ஒரு மனுஷனோட சராசரி லட்சியங்கள்…

1) +2 ல நல்ல மார்க் வாங்கணும் வாங்கணும் (Echo from the society including family)

2) நல்ல துறையில ஒரு பட்டபடிப்பு படிக்கணும் படிக்கணும்

3) லட்ச கணக்கில் சம்பளம் கிடைக்கும் (படிப்புக்கு சம்பந்தம் இல்லாத)வேலையில சேரணும் சேரணும்

4) எப்படியாவது கார் நிறுத்துற மாதிரி ஒரு பங்களா வீடு வாங்கணும் வாங்கணும்

5) சாகும் போது நம்ம பேருல ஒரு கோடி ரூபா இருக்கணும் இருக்கணும்

6) அதுக்கும் அதிகமா பணம் இருந்தா பல ஏக்கர் விவசாய நிலங்கள விவசாயவன் வயித்துல அடிச்சு புடுங்கனும்(Real Estate)

எண்களுக்காக எண்களால் எண்களைக் கொண்டு கணக்கு போடும் வாழ்க்கை தான் ஒரு இந்தியனின் லட்சிய வாழ்க்கை!

(பொருளுக்கு அலைகின்ற பொருளற்ற வாழ்க்கை துரத்துதே:(…)

உயிர் வாழும் போதே நிறைய சம்பாதிச்சு தன் வருங்காலத்துக்கும் சொத்து சேர்த்து வைக்கணும்-னு சொல்லி கொடுக்கிற இந்த சமுதாயம்(அம்மா அப்பா உட்பட)…

சாகிறதுக்குள்ள நம் சமூகத்துக்கு பயனுள்ள வகையில எதையாவது சாதிச்சுட்டு போகணும்-னு

எண்ணத்தை சிறுவயதிலேயே விதைத்தால் நன்று!

நம் வாரிசுகளுக்காக அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்தால் அது அவர்களை உழைக்க விடாமல் சொம்பேரியாக்கும், உழைப்பை கற்பிக்காமல் விடுவது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகம் :(

ஏழை குடுமபத்தில் பிறந்து, பெற்றோர் தன்னை வளர்க்க படும் பாட்டை பார்த்து வளரும் பிள்ளைகளுக்கே… உழைக்கும் எண்ணம் உருவாகும்!

இல்லையெனில் அவர்களுக்கு உழைப்பின் அருமை தெரியாமல் போய்விடும்…

நாம ஏன் இன்னும் வெளி நாட்டுக்காரனுக்கு அடிமையா இருக்கோம்?

நம் தினசரி வாழ்வில் பார்க்கும், பயன்படுத்தும் பொருட்களில் எத்தனை இந்திய கண்டுப்பிடிப்புகள் இருக்கிறது என்பதை கணக்கிட்டால் உண்மை விளங்கும்:(

Cell Smart phone, Watch, Laptop, PC, Smart card, RFID, bulb, Bus, Auto, Bike, Shoe….

அனைத்தும் வெளிநாட்டவன் கண்டுப்பிடித்த சாத்தான்கள்… ஒரு வேளை இந்திய கண்டுபிடிப்புகள் இருந்தாலும் அதன் மீது நமக்கே நம்பிக்கை இல்லை :(

நான் தினமும் பார்க்கும் தமிழனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு நீராவியால் உருவாகி நம் வயிற்றுக்குள் பயணிக்கும் இட்லி, அதற்கு துணையாக நம் தேசிய கொடி வண்ணங்களிலான சட்னிகள்…

உலக அரங்கில் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த விஞ்ஞானிகள் மிக சிலரே!

விரல் விட்டு எண்ணி விடலாம்:(

கடைசியாக நானும் ஒரு இந்தியன் என்று மார் தட்டி பெருமைப் பட செய்தவர் அப்துல் கலாம்!

அவருக்கு பின் இந்தியாவில் விஞ்ஞானிகள் இல்லை என்று சொல்லவில்லை…

இருக்கிறார்கள்! வெளி நாடுகளில் அங்கு அவர்களுக்கு பேன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்:(

ஏன்… அந்த பேன் இந்தியாவில் இல்லையா?

காரணம்… வெளிநாட்டு மோகம், டாளர்களில் பணம் பார்க்கும் நோக்கம்:)

அது சரி… அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை இங்கு கிடைத்திருந்தால் இங்கு இருந்திருப்பார்கள்!

இங்க இருக்கிறவங்களுக்கு தான் அவன் அவனுக்கு அவனே சொந்த செலவுல சிலை வச்சி மரியாதை செய்யவே நேரம் சரியா இருக்கு:(

வருசா வருஷம் சொல்லி வச்ச மாதிரி சமந்தமே இல்லாது எல்லோரையும் பதட்டமாக வச்சி…

பள்ளி தேர்வு முடிவுகள் வருது…

முதல் மூன்று மதிப்பெண் எடுக்கிறவங்கள பேட்டி எடுக்கிறாங்க…

அடிச்சு பிடிச்சு IIT, REC, Anna University போன்ற நிருவனங்களில் பணம் இருப்பவர்கள் ஒரு இருக்கையை முன் பதிவு செய்கிறார்கள்..

ஆண்டு தோறும் புத்தக அறிவை மட்டுமே மண்டையில் ‘Upload’ செய்து கொண்டு ‘Practical knowledge’ இல்லாமல் ஆயிர கணக்கில் பாட்டதாரிகள் அச்சடிக்கப்பட்ட இயந்திரமாக வெளியே வருகிறார்கள்…

இதுவரை ஒரு சிறந்த விஞ்ஞானியோ, படைப்பாளியோ வந்ததாக தெரியவில்லை :(

என்ன தான்… கல்வி முறையில் மாற்றம் என்று தலையில் அடித்துக் கொண்டு எத்தனை பேர் கத்தினாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல சமுதாய மண்டையின் ஒரு மூலையில் இருக்கும் மூளையில் உறைக்காமல் போகிறது:(

கல்வி முறையில் மாற்றம் தேவை என்று வந்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் ‘சாட்டை’…

அதில் வரும் ஒவ்வொரு வசனமும் நிகழ்வும் இந்த சமுதாயத்துக்கு கொடுத்த ‘சாட்டை அடி’

அதையும் பொழுது போக்காக தானே எடுத்துக் கொண்டோம்:(

அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரின் பிள்ளை தனியார் பள்ளியில் படிக்கிறார்கள்…

நம் வரலாற்றில் பல மேதைகளை உருவாக்கிய அரசு பள்ளிகளின் கல்வி தரம் கேள்வி குறியாக தான் உள்ளது… வருந்த தக்க விஷயம் தான்:(

அனால் தனியார் பள்ளியில் கல்வி தரம் பெரிதாக உயர்ந்து விட வில்லை… தங்கள் பிள்ளை பேர் சொல்லும் பள்ளியில் தான் படிக்கிறார்கள் என்று பெற்றோரின் கௌரவம் அங்கு ‘முகமூடி’ போட்டிருக்கிறது:(…

பெருமைக்கு ஆங்கிலம் மூலம் கல்வி பயிற்றுவிட்டு தன் பிள்ளை தமிழை மறந்து விட்டார்கள் என்று வருத்தப்படுவதில் என்ன நியாயம்?

பிள்ளையின் பெயரை தான் பள்ளி மற்றும் ஊர் சொல்ல வேண்டும்… படிக்கணும்-நு நினைக்கிறவன் ஆத்தங்கரையில ஆடு மாடு மேய்ச்சிட்டு கூட படிப்பான்!

படிப்பான்… :)

தனியார் பள்ளியில் பாடம் நடத்துவதில்லை… தேர்வுக்கான விடைத்தாளை தானே கற்பிக்கிறார்கள்:(

நான் பொறியியல் படிக்க 4 வருடங்கள் எவ்வளவு செலவானதோ… அதை விட அதிமாக இப்போது LKG படிக்கும் குழந்தைக்கு செலவாகிறது :(

செலவு செய்து படிக்க செய்தேன் என்று சொல்வதில் தான் சிலருக்கு பெருமையும் கூட :)

‘அட பெரும பெத்த காரைங்களா…:P’

‘அபியும் நானும்’ படத்தில் காட்டியதை போல முதல் நாளிலிருந்து நீண்டுரிந்த வரிசையில் நின்று என் குழந்தைக்கு படிவம் வாங்கினேன் என்று இழித்தப் படி சொல்லும் நண்பரை பார்க்கும் போது என் நினைவுக்கு வரும் பாடல்…

‘போனா போகுதுன்னு விட்டீனா கேனன்னு ஆப்பு வப்பாண்டா,

தானா தேடி போயி நின்னீனா வேணுன்னு காக்க வப்பாண்டா’

ஒரு குழந்தை…

அம்மா அப்பா என்று சொல்ல முயற்சிக்கும் முன்பே Play school ஆயாவிடம் ஒப்படைத்து விட்டால் பெற்றோர் பாசம் பற்றி அவர்களுக்கு என்ன தெரிந்து விடும்,

அதனால் தான் வளர்ந்த பிறகு ‘பழிக்கு பழி’ என்று பெற்றோர்கள் முதியோர் இல்லங்களில் சிறை வாசங்கள் அனுபவிக்க வேண்டிய அவசியம்:(

விளையாடற குழந்தைக்கு எதுக்கையா இஸ்கூல்…

முட்டை உள்ள இருந்து உடைச்சுகிட்டு வெளிய வந்தா தான் அது ‘உயிர்’!

வெளிய இருந்து உடைச்சா அது ‘Omlet’ தான்!!

தன் குழந்தைக்கு வீட்டில் அறிவை…

கற்பிக்க விரும்பாதவர்கள் எதற்கு பிள்ளை பெற வேண்டும்?

நன்றாக படிக்க தெரிந்த அனாதை குழந்தைகளில் ஒன்றை தத்தெடுத்து வளர்க்கலாமே!

அப்படியாவது மக்கள் தொகையை ஈடுகட்டி விடலாம்!!

நம் அரிசியல் வியாதிகளோ அவரவர் பினாமியின் பெயர்களில் ஊருக்கு ஐம்பது பள்ளி, கல்லூரி என கடைகளை திறந்து வைத்து விட்டு…

‘எந்த சீட் எடுத்தாலும் பத்து ருபாய்’-னு கூவி கூவி கல்வியை விற்கிறார்கள்:(

கல்வியின் மதிப்பு குறைந்துவிட்டதற்கு இது தான் சான்று!

கல்வி முறையை மாற்ற ஏதாவது இந்த கால கட்டத்தில் செய்தால் தான்…

நம் வருங்கால தலைமுறையினர்,

யாருக்கும் தலை வணங்காமல்,

முதுகு தண்டை நிமிர்த்தி,

சுதந்திரம் என்ற சொல்லின் பொருளை உணர்ந்து,

உண்மையில் சுதந்திரமாக வாழ முடியும் :):):)

‘Jai Hind’

‘வந்தே மாதரம்’

இன்னும் ஏதாவது வசனம் இருந்தா நீங்களே சொல்லிகோங்க…:)