காதலில் சொதப்புவது எப்படி?

இது காதலால் சொதப்பிய பதிவு…:(:(

எனக்கு காதல் ஏன் செட் ஆகல-னு இந்த பதிவு உங்களுக்கு விளக்கும்:(:(:(

என் நிஜ வாழ்கையில் நடந்த சொதப்பல் சம்பவங்களை இன்னும் சொதப்பி சொல்லியிருக்கிறேன்:(

அதிகமாக சொதப்பி இருந்தால் மன்னித்து விடுங்கள்!

‘லவ் பண்ணுங்க சார்… Life நல்லா இருக்கும்’

என்று எவனாவது…

யார் வம்புக்கும் போகாமல் சும்மா இருக்கும், கடைசி வரைக்கும் சும்மா இருக்கணும் என்ற கொள்கையுடன் வாழும் என்னிடம் அறிவுரை கூறும் போது என் வயிறு எரியுது… அப்போ என் மனசுகுள்ள சொல்லும் டயலாக்…

‘பன்னிக் குட்டி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுதே…’

என்னமோ லவ் பண்றவங்க எல்லாம் சொர்கத்தில இருக்கிற மாதிரியும் நாங்க எல்லாம் நரகத்தில தவிச்சு போய் பாவத்திலிருந்து மீட்கிறதுக்கு உதவு கேட்ட மாதிரியும்…

ஒவ்வோவொருத்தன் பண்ற கொடுமைய சொல்ல நான் ஒரு சைக்கிள பிடிச்சு போடணும்… மன்னிக்கவும் ஒரு ‘Encyclopedia’ போடணும்…:(

நீங்க சொன்ன அதையே தான் நானும் சொல்றேன்…

‘லவ் பண்ணுங்க சார்… Life நல்லா இருக்கும்’

ஆனா லவ்-னா என்னனு நல்லா புரிஞ்சு பண்ணுங்க… அப்ப தான் இன்னும் நல்லா இருக்கும்!

இன்றைய காதல் என்பது ‘Morphine’ என்ற மருந்து இரத்தத்தில் கலப்பது போன்ற உணர்வு…

உடல் மரத்து போய்விடுகிறது, மூளையையும் சேர்த்து!

காதல் வந்தவன் வயிற்றை கத்தியைக் கொண்டு கிழித்தாலும் சிரித்திக் கொண்டே அதற்கும் ஒரு கவிதை சொல்வான்!!

ஆனால் அதே காதலில் சற்று சறுக்கினாலும்…

அவன் தனக்கும், தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு எமனாக மாறிவிடுகிறான் :(

இந்த பதிவு எழுத காரணமான ஒரு சம்பவம்…

ஒரு இரவு வீட்டிலிருக்கும் என்னைத் தேடி நெருங்கிய நண்பன் ஒருவன் வந்தான்…

எனக்கு அளவில்லாத ஆச்சர்யம்!!!!!!!

ஏன்னா… என்னைய தேடி வீட்டுக்கு இதுவரை ஒரு நாய் கூட வந்தததில்லை!!

நான்,’டேய்… என்னடா அதிசயம்! திடீர்னு வந்திருக்க… உள்ள வாடா’

நண்பன்,’அதெல்லாம் இருக்கட்டும், உன் வண்டிய(Bike) எடுத்துட்டு வா… வெளிய போகலாம்’

நானும் ‘பையன் நிறைய வச்சிருப்பான், வீட்டில ராத்திரி சாப்பாடு வேணாம்னு சொல்லிட வேண்டியதான் ‘ என்று மனதில் பல திட்டங்களை தீட்டிக்கொண்டே அவனுடன் கிளம்பி சென்று விட்டேன்…

நேராக ஊருக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடைக்கு வண்டியை செலுத்த சொன்னான்… நானும் அவன் சொன்னவாறு செய்தேன்…

நண்பன் வண்டியிலிருந்து இறங்கி…

‘உனக்கு என்ன வாங்கட்டும்’ என்று கேட்டான்:)

‘எனக்கு ஒன்னும் வேணாம், நான் தான் வண்டி ஓட்டனும்… உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ’ என்றேன் நல்லவனாக!

மதுக்கடை உள்ளே அவன் மது அருந்த தொடங்கினான், நான்…

Side dish-களை அரைக்க தொடங்கினேன்(இவன் கூட வந்தததுக்கு இது தான் மிச்சம்)!!

அவன் வெகு நேரமாக மது கோப்பையையே பார்த்து அழுதுக் கொண்டிருந்தான்.

நானே ஆரம்பித்தேன், ‘ என்ன லவ் ஊத்திக்கிச்சா?’

நண்பன் ஆச்சர்யமாக,’அது எப்படிடா உனக்கு தெரியும்?’

நான்,’ஏரி உடஞ்சா கரைக்கு வந்து தான ஆகணும்… சரி சொல்லு, என்ன பிரச்சன’

நண்பன் கண்ணீருடன் தொடர்ந்தான்,’அந்த பொண்ணுக்கும், இன்னொரு பையனுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணிடாங்கடா’

‘பின்ன… பொண்ணுக்கும் பொண்ணுக்குமா கல்யாணம் பண்ணுவாங்க…’

‘டேய்… நானே கொலவெறில இருக்கேன்… அவளும் கல்யாணத்துக்கு

சரி-னு சொல்லிட்டா… அதான்டா மனசுக்கு கஷ்டமா இருக்கு:(‘

‘அதுக்கு நீ சீக்கிரமாவே போய் அவங்க வீட்டுல கல்யாணம் பேசிருக்கணும்… அறுபதாம் கல்யாணம் வரைக்கும் காதல் பண்ணலாம்னு நினைச்ச… அந்த பொண்ணு சரியான நேரத்தில முடிவு எடுத்திருச்சு…’

‘நான் என்ன பண்றது… இன்னும் கொஞ்சம் வசதி வந்த பிறகு பேசலாம்னு நினைச்சேன்’

‘அது அந்த பொண்ணுக்கு வசதியா போய்டுச்சு, வசதியோட ஒருத்தன் வந்துட்டான்ல… சரி விடு… நமக்கு இன்னொருத்தி இனிமேலா பிறக்க போறா… த்ரிஷா இல்லனா திவ்யா’

இப்படியே அவன் புலம்பிக்கொண்டிருந்தான், நானும் பதில் சொல்லி அவனையும் Side dish-களையும் தேற்றிகொண்டிருந்தேன்… :D

ஒரு வழியாக வேலையை முடித்துவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பினோம்… நான் வண்டி ஓட்ட என் பின்னால் தள்ளாடியபடி அமர்ந்து அழுது கொண்டிருந்தான்:(

நல்ல வேளையாக அவன் முகத்தை பார்க்க தேவையில்லை, முன்னிருக்கும் சாலையில் என் பார்வை இருந்தது… :P

சாலையின் தொலைவில்…

ஒரு கனரக வாகனம்(lorry) பெரிய வெளிச்சத்துடன் எங்கள் எதிரே அதிவேகமாக வந்து கொண்டிருந்தது…

அந்த வண்டி அருகில் வரும் போது… திடீரென்று இவன் பின்னாலிருந்து என்னை தடுமாறச் செய்தான்…

‘டேய்… ஆடாம வாடா எதிர்ல வண்டி வருது…’

‘நேரா அதுக்குள்ள விடுடா… இனிமேல் நான் உயிரோட இருக்க கூடாது’ என்று அழுது கொண்டு, என் தோள்களை பிடித்து தடுமாற செய்தான்…!

அவன் என் மீது சாய்ந்ததில் அதிக எடை தாங்க முடியாமல் என் கட்டுப்பாட்டை இழந்து அந்த லார்ரிக்கு மிக அருகில் எதிர்நோக்கி வண்டி சென்றது:O

கண் கூசும் வெளிச்சத்தில் அந்த கனரக வாகனம் என் கண்களுக்கு…

Remodelling செய்யப்பட்ட எமனின் Gigantic உலோக எருமை மாடு சக்கரங்கள் கட்டிக்கொண்டு உருண்டு வருவது போலிருந்தது :(

என் வண்டிக்கும் அந்த லார்ரிக்கும் உள்ள இடைவெளி வேகமாக குறைந்துக் கொண்டிருக்கும் அந்த Slow motion வினாடிகளில்…

அது வரை நான் வாழ்ந்த சந்தோசமான நினைவுகள் மற்றும் நிகழ்வுகள், காலத்தால் என் கண்களில் 3Dயில் திரையிடப்பட்டது B-)

Mind voice in 4 Tera Hertz processing speed:

‘பின்னால உட்கார்ந்து வரவனாவது… அவன் ஆள் கூட சேர்ந்து டூயட் பாட்டெல்லாம் பாடிருப்பான்…

ஆனா நான்…

வாரம் வாரம் அம்மா கூட ஆஞ்சிநேயர் கோயிலுக்கு போறப்பக் கூட

ஒரு பொண்ணையும் ஓரக் கண்ணால கூட பார்த்ததில்லயே:(‘

அந்த மரண நொடியில் என் சிந்தனை,’நமக்கு இன்னைக்கு ராத்திரி சாப்பாடு நரகத்தில தான் டோய் :(… வருத்த கோழி கொடுப்பாங்களா? இல்ல நம்மல வருத்தெடுப்பான்களா??’

இனி அந்த ஆஞ்சிநேயர் தான் நம்மல காப்பத்தணும் என்று மனதில்

அவர் நாமத்தை உச்சரித்தேன்…’ஜெய் ஆஞ்சிநேயா’

அந்த மந்திரத்துக்கும் ஒரு சக்தி இருக்க தான் செய்தது!

திடீரென்று என் உடலில் Adrenaline எனப்படும் வேதிப்பொருள் பெருக்கெடுத்தது, நடுக்கம் குறைந்து, மனது தெளிவானது… என் உடல் செயற்பாடு கூர்மையானது :)

இதற்கு பெயர் தான் Adrenaline Rush-ஓ(உபயம்: Hollywood) என்பது போல்

லார்ரிக்கு அருகில் சில அடி தொலைவில்…

எப்படியோ வண்டியை நிலைப்படுத்தி அந்த வாகனத்தில் சிக்கி சிதறாமல் அப்படியே வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினேன்… அந்த லார்ரி ஓட்டுனரும் தூங்கிக் கொண்டே ஒட்டியதால் எங்களை கவனிக்காமல் நேராக சென்று விட்டார்…

மரண பயத்தை காட்டி விட்டான் என்று அவன் மீது கடும்கோபம் எனக்கு…

அவனோ என் முதுகில் சாய்ந்திருந்த படி கேட்டான், ‘என்னடா… எதிர்ல வண்டி வருது-னு சொன்ன… அதுல மோதலையா?’

இந்த நிலைமையில் அவனை அடித்தாலும் அவனுக்கு வலிக்க போவதில்லை… இவனை வைத்து என்ன செய்வதென்றும் தெரியவில்லை, பயமும் கூட தொற்றிக்கொண்டது :(

உடனே இன்னும் இரு நண்பர்களை துணைக்கும் அழைத்தேன்… பதட்டத்தில் சரியாக பேச முடியாமல் திக்கி திணறி பேசி அவர்களை நான் இருக்கும் இடத்திற்கு வரவழைத்தேன்…

அவர்களிடம் நடந்ததை கூறினேன்…

நினைவில்லாமல் இருந்த அவனை வீட்டுக்கு கொண்டு சென்றால்…

அவன் கூட இருந்த பாவத்திற்கு எங்களுக்கு தான் செருப்படி கிடைக்கும்…(ஏற்கனவே வாங்கிருக்கோம்)

அதனால் ஊரில் ஒரு விடுதியில் அன்றிரவுக்கு மட்டும் அறை பதிவு செய்து, அவனை ‘Water wash’ செய்து சமாதானம் செய்ய முயன்றோம்…

ஜல அபிஷேகத்துக்கு பிறகு அவனை தலை, கைகள், கால்கள் என்று மூன்று பெரும் சேர்ந்து அறையின் படுக்கையில் மெதுவாக தூக்கி வீசினோம்…:(எரும மாடு மாதிரி கனக்கிறான்)

அவன் அவ்வளவு எளிதாக சமாதானம் ஆகவில்லை… அதிகமாக சத்தம் போட்டு தூங்கிக்கொண்டிருந்த ஊரையே எழுப்பிக்கொண்டிருந்தான்…:O

‘எனக்கு விஷம் வாங்கி கொடுங்கடா, குடிச்சிட்டு இன்னைக்கே செத்து போய்டறேன்… ‘

‘ஏன்… அப்படி என்ன நடந்து போச்சு ‘, கேட்டான் அருகில் இருந்த ஒரு நண்பன்.

‘இத்தன நாளா நான் உயிரா நினச்சவ என்னைய பார்த்து “போடா (க)யிரு”-னு சொல்லிட்டு போய்ட்டாடா’, தலைக்கேரிய போதையினால்…

அவன் நாவை கட்டுப்படுத்த முடியாமல் உளறினான் :(

‘சரி விடு… அவ போனா என்ன?… உனக்கு எப்பவுமே Friends நாங்க இருக்கோம்…’, நண்பன் ஆறுதல் சொன்னான்.

‘எனக்கு யாரும் தேவையில்ல… இந்த உயிர் எனக்கு தேவையில்ல…

என்னைய சாக விடுங்கடா…’ என்று அவன் படுக்கையிலிருந்து எழ

முயன்றான்… அவனால் கண்ணிமையை கூட நகர்த்த முடியவில்லை:(

எப்படி எழ முடியும்?… படுத்துக் கொண்டே தொடர்ந்தான்…

‘என்னைய உட்கார வைங்கடா ‘ என்றான் பாவமாக…

நண்பனாய் போன பாவத்துக்கு அவனை உட்கார வைத்து ஆளுக்கு ஒரு பக்கமாக அணைத்துக் கொண்டோம்!

‘ நீங்க என் friends தானே…’, ஒரு சிறு பிள்ளை போல் கேட்டான்…

‘ஆமான்டா…’, மூன்று பேரும் ஒன்றாக பதிலளித்தோம்

‘நான் என்ன சொன்னாலும் செய்வீங்களா…’, பரிதாபமாக கேட்டான்.

‘செய்வோம்… சொல்லு’ மூன்று பேரும்…

‘என்னைய கொன்னுடுங்கடா…’ என்றான்,

மீண்டும் முதலிலிருந்து சொன்னதையே சொல்லி கதற ஆரம்பித்தான்… :O

அதை கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு வக்கீல் நண்பன் அவன் கன்னத்தில்’பலார்’ என்று வைத்தான்(சற்று நேரத்திற்கு என் காதுகளே Mute ஆகிவிட்டது)… அதற்கு பின் அவன் சற்று தணிந்தான், தெளிந்தான்…

‘நீ செத்து போய்ட்டா… நீ எப்படியும் விடுஞ்ச பிறகு கூட வீட்டுக்கு வந்துடவன்னு உனக்காக வாசலில விளக்கமாத்தோட நிக்கிற உங்க அம்மா கிட்ட யாருடா அடி வாங்கிறது’, அவன் கோபமாக சொன்னதால் நாங்கள் யாரும் சிரிக்க முடியவில்லை:(

தொடர்ந்தான்…

‘உன் உயிர்ன்னு சொல்றியே… அது உங்க அம்மா கொடுத்தது தானடா…

அத பறிக்கிற உரிமை அவங்களுக்கு தான் இருக்க முடியும்…

நாளைக்கு வீட்டுக்கு போனதும் அவங்க கையால

சோத்துல விஷம் கலந்து கொடுக்க சொல்றோம்’,

மூச்சு விட்டு மீண்டும் தொடர்ந்தான்…

‘அப்ப கூட உன்னைய பெத்த பாவத்துக்கு அவங்களுக்கு கொலை பழி தான்டா கிடைக்கும்’

அப்புறம் வக்கீல் கொஞ்சம் நாடோடிகள் சசி குமார் மாதிரி டயலாக் பேசுனான்…

‘ஏன்டா… நொன்னைகளா… அந்த பொண்ண நீ லவ் பண்றப்பா எங்க பேச்ச கேட்காம தனியா தான டா போன… இப்ப நீ சாகிறதுக்கு எங்க துணை வேணுமா…’ என்று என்னையும் முறைத்து பார்த்துவிட்டு அவனிடம் தொடர்ந்தான்…

‘நீ எமன பார்க்க போறதுக்கு உனக்கு Driver வேற கேட்குதா?, நீயே வண்டிய ஓட்டிட்டு போயிருந்தா போய் சேர்ந்திருக்கலாம்ல… அவன ஏன்டா கூட்டிட்டு போன’ என்று சொல்லிவிட்டு என்னிடம் வந்தான்…

‘உனக்கு அறிவில்ல… அவன பத்தி தெரிஞ்சும், அவன ஏன் தண்ணியடிக்க கூட்டிட்டு போன?’

நான்,’ எனகென்ன தெரியும்…

இப்படி என்னையும் வீட்டுக்கு போக விடாம மாட்டிவிடுவான்னு முன்னவே தெரியாம போச்சே:(‘

‘சரி சரி… விடியிற வரைக்கும் இவன பார்த்துக்குவோம்… விடிஞ்ச பிறகு அவங்க வீட்டுல போய் விட்டுடலாம்…’

‘டேய்… இவன நம்பி நான் வீட்டுல சாப்பிடாம வந்திட்டேன்… பசிக்குதுடா…’ என்றேன் வயிற்றை பிடித்துக்கொண்டே…:D

அவன் எதுவும் பேசாமல் முறைத்து பார்த்தேன்…

நான்,’ஒரு நாள் சாப்பிடாட்டி என்ன குறைஞ்சா போய்ட போறேன்… பரவா இல்ல, நான் சமாளிச்சிக்கிறேன்:D’

நான் சொன்னதை கேட்டு ஒரு நொடி அமைதிக்கு பிறகு அறையில் இருந்த அனைவரும் சிரித்தோம்…

அந்த காதல் கிறுக்கன் உட்பட….:):):)