தமிழ்Crunch

@tamilcrunch Latest Technology and Social Media news in Tamil

    Coin ஆல்-இன்–ஆல் கார்ட்!

    சொந்தப் பயன்பாட்டுக்கு ஒன்று, ஆஃபீஸுக்கு ஒன்று எனத் தொடங்கி ஏழெட்டு கிரெடிட் கார்ட்களைப் பாக்கெட்டில் சுமந்துகொண்டு திரிகிற பேர்வழியா நீங்…சொந்தப் பயன்பாட்டுக்கு ஒன்று, ஆஃபீஸுக்கு ஒன்று எனத் தொடங்கி ஏழெட்டு கிரெடிட் கார்ட்களைப் பாக்கெட்டில் சுமந்துகொண்டு திரிகிற பேர்வழியா நீங்கள்? எப்போது எதை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமல் திணறுகிறவரா? கார்ட்களைச் சேர்த்துச் சேர்த்து பர்ஸ் குண்டாகிவிட்டதே என்று தவிக்கிறவரா? கவலை வேண்டாம். உங்களுடைய பர்ஸுக்கு ஒரு டயட் ப்ளான், ”COIN” என்கிற ஆல்-இன்–ஆல் கார்ட். வெறும் .844 மில்லிமீட்டர் தடிமனில் உங்களுடைய எல்லா கார்ட்களையும் நிரப்பிவிடலாம்.