அது ஒரு "ASL PLS" காலம். யாகூ மெசன்ஜரின் பல்வேறு அறைகளில் மாறி மாறி பேக் ஐடிகளிடம் ஜொள்ளொழுக கடலை வறுத்துக்கொண்டிருந்த காலம், 2003 காலகட்டம். ஒரு நாள் "தாமாக முன் வந்து" ஒரு பெண் பேசத்தொடங்கினார். வயது 21 என்றும் ஊர் மொரிஸியஸ் என்றும் சொன்னார். வீடியோ சாட்டிங்கிற்கு தனிப்பணம் கொடுத்து ஒரிஜினல் ஐடி என உறுதிப்படுத்தியபின் கனஜோராய் ஓடியது கடலை. தமிழ் மொழி குறித்தும், முருகன் உள்ளிட்ட கடவுளர் கோயில்கள் குறித்தும் பெரும்பாலான விசாரணை ஓடும். எனக்கும் அவர் மீது ஒரு க்ரஷ் உருவாகிவிட்டது.

"பாரீஸ் 'fuc@%+g bitch'களுக்கான நகரம். 'வெனிஸ்'தான் காதலர்களுக்கான நகரம்" நாம் அங்கு சுற்றுலா போகலாம் என்றெல்லாம் பேச்சு ஆரம்பித்து ஒரு மாதிரியாக போய்க்கொண்டிருந்த போது ஒருநாள் "மாடி வீட்டு பையன் ப்ரொப்போஸ் செய்துவிட்டான், அவன் அதை சொல்லியது என் நடுவீட்டில் குடும்பத்தினர் அனைவரின் முன்பு " என்றவள் "அந்தப்பையன் பிரான்ஸ் குடியுரிமை வைத்திருக்கிறான். பாரீஸில்(!?) சொந்தமாக கடை வைத்திருக்கிறான் அதனால் என் வீட்டிலும் என்னை சம்மதிக்க சொல்கிறார்கள்" என்றவள் எம்.எஸ்.என் வாய்ஸ் சாட்டில் வந்து "கிரியோலில்" சிலபல வார்த்தைகள் அழுதுவிட்டு போனாள். அடுத்த நாலைந்து நாட்கள் வரவில்லை, பின்னர் திடீரென ஒருநாள் வந்து "இனிமேல் சாட்டிங் வரமாட்டேன். அவருக்கு அது பிடிக்காதாம்" என்ற ஒற்றை வார்த்தையுடன் எண்ட் கார்ட் போட்டு விட்டு போய்விட்டாள். சில மாதங்கள் கழித்து ஒரு Yacht-ல் நிற்கும் படத்தை அவதாரில் வைத்திருந்தாள். அதுதான் அவளின் மொத்தப்படத்திலும் அழகானது.

கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பின் இன்று அவள் முகநூலில் தென்பட்டுவிட்டாள். காலத்தின் கொடுங்கரத்தில் சிக்கி 'பாட்டாளி' பட 'வடிவு' வேட வடிவேலுவாக மாறியிருந்தாள்.

"கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி
 
பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி" அப்படின்னு தனியா கக்கூஸுக்குள்ள போய் பாடி அழுதுட்டு வரலாம்ன்னு இதயம் சொன்னாலும்,

" அடியே பாரீஸ் தொழிலதிபர்ன்னு போனியேடி"ன்னுதான் குதுகலமா ப்ரைய்ன் வாய்ஸ் கேக்குது...அவ்வ்வ்

Show your support

Clapping shows how much you appreciated வரவனையான் ’s story.