February tweets


புலிக்கு அல்ஜிப்ரா தெரியுமா? அப்புறம் என்னடா கணக்குல புலி ?


நெடுஞ்சாலையில் வாகனங்களை விட கும்பகோணம் டிகிரி காபி கடைகள் பெருகிவிட்டன.!


கெட்டவர்களை மனிதர்களாகப் படைத்த கடவுள் எப்படி நல்லவராக இருக்க முடியும் ?


அவள் காதோர சுருள் முடியில் தூக்கிட்டுத் தொங்குகிறது என் ‘கெத்து’


மருந்துச் சீட்டில் இருப்பது மருத்துவரின் கையெழுத்து அல்ல, நோயாளியின் தலையெழுத்து புரியவே புரியாது.


அவளின் நினைவுகளை அழிக்கப் போதை ஊசியும் போராடி பொய்த்தது.!


ஆறாம் அறிவு உள்ளவர்களால் சகித்துக் கொள்ள முடியாத படம் ஏழாம் அறிவு.


தீயவர்கள் எண்ணிக்கை அதிகமான காரணத்தின் ஆராய்ச்சி முடிவு — நல்லவர்களை சொம்பு என கிண்டல் செய்வதே!


பைக்கில் செல்லும் பக்தர்கள்தான் மிகவும் ரொமான்டிக்,
கடவுளுக்கே ப்ளேன் கிஸ் கொடுக்கிறார்கள்.!


அந்தக்கால அரசமர திண்ணையை ஒத்தது, தற்கால சமூக வலைதளங்கள்.


தாலியைக் காட்டியதும் வில்லனைக் கொல்லாமல் விட்டுவிடும் ஹீரோக்கள் இப்பொழுதெல்லாம் வருவதில்லை


காலால் மண்ணில் கோலம் போடும் பெண்ணைக் கண்டால் உடனே தொல்லியல் துறைக்குத் தகவல் கொடுக்கவும்.


புது செருப்பு காலை மட்டுமில்லை கையையும் கடித்து விட்டது இந்த மாத பட்ஜெட்டில்.


மிருகங்களுக்கும் ஜாதகம் கணிக்க முடியுமா? ராசி, நட்சத்திரம் அவைகளுக்கும் உண்டா?


கூட்டத்துல ஒருத்தன் மட்டும் நல்லது செய்யனும்னு நினைச்சாலே அவன குரூப்ல டூப்புன்னு சொல்லி வெளிய தள்ளிருவானுங்க!!..#நம்ம ஊரு அரசியல்


வருங்கால சந்ததிகளுக்கு, தண்ணீர் என்றால் அது ஒரு திரவப்பொருள், உயிரினங்களுக்கு பயன்படும் என்று மட்டும் பாடத்தில் வந்துடக்கூடாது #WhatIWantIs


இலக்கிய கசாயம் யாரேனும் இரண்டு தேக்கரண்டிப் போட்டுக் கீச்சுவார்களென #WhyIamInTwitter


வயிற்றெறிச்சலை லாவகமாக நாவிக் கமலத்திற்குக் கொண்டு வந்து, காறும் சத்தம் காதைப் பிளக்கத் தூ…வென துப்பி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.


மாநகரப் பேருந்தில் சில்லரைப் பயலுகளுக்குத்தான் முதல் மரியாதை.


குடும்பம் என்று சொல்வதிற்குப் பதிலாக ‘குடும்பம் என்ற மனிதர்கள் சார்ந்த அமைப்பு’ என்று லெங்க்தா பேசுனா அவன் நீயா நானா கெஸ்ட்டாதான் இருப்பான்


நெடுஞ்சாலைத் தேநீர், வெந்நீரின் வெர்சன் -2


For more updates follow me here