“Sarah P.Duke Garden”, பெயரே சொல்கிறது இந்த பூங்கா யாரால் உருவாக்க பட்டது என்று. ஏறத்தாழ 55 ஏக்கர் பரப்பளவில், 75 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இந்த பூங்கா , Duke University வளாகத்திலேயே அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு. அடர்ந்த வணப்பகுதியின் மையத்தில், பறந்து விரிந்து கிடக்கும் இந்த பூங்காவை சுற்றி பார்க்க ஒரு நாள் போதவில்லை.

Rose Garden, Zen Garden, Native Garden, Asian Garden என, இந்த பூங்கா 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு பகுதிகளையும் சென்று பார்க்க குட்டிக்குட் டி நடை பாதைகள், மூங்கில் பாதைகள், மர பலகைகளில் அமைக்கப்பட்ட சாலைகள் என வித்தியாசமான வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதையில் நடந்தால், சுமாராக 5 mile தூரம் நடக்க வேண்டியுள்ளது

மேலும், இயற்கையை ரசிக்க,பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் இளைப்பாற மர இருக்கைகள், கற்களை கொண்டு உருவாக்கப்பட திட்டுகளும், குடில்களும் உள்ளன.

ஆயிரக்கணக்கான செடிகள், மலர்கள் , நீர் நிலைகள், சிற்பங்கள் அங்காங்கே இருப்பது கண்ணுக்கு விருந்தளிப்பதாக அமைந்துள்ளது. வருடம்தோறும் பூக்கும் வகையில், கால நிலைக்கு ஏற்ப செடிகள் நடப்பட்டுள்ளதால், கோடையில் மட்டுமல்லாமல் , குளிர் காலம், இளையுதிர் காலம் என வருடம் முழுவதும் ரம்மியமாக இந்த பூங்கா காட்சி அளிக்குமாம்.

பூங்காவின் பல பகுதியில் அமைக்க பட்டுள்ள குளத்தில் பல வகையான தாமரை, லில்லி மலர்கள், குளத்தில் உள்ள வண்ண மீன்கள் குழந்தைகளை வசீகரிக்கும் வண்ணம் உள்ளது.

இந்த பூங்காவின் அடர்ந்த வனப்பகுதியில் pine மரங்கள் ஆதிக்கம் செலுத்திணாலும், Maple, Redwood போன்ற மரங்களும் உள்ளன. அது மட்டும் அல்லாமல், 1938 ஆம் ஆண்டு நடப்பட்ட Magnolia மரம் வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. இந்தகைய வரலாற்று சிறப்பு மிக்க மரத்தை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த மரத்தில் இருந்து எடுக்கப்பட்டு, நடப்பட்ட கன்றுகள் இந்த நகரம் முழுவதும் உள்ளன. இந்த மரத்தில் பூக்கும் பூ மட்டும் அல்லாமல், பளபளப்பான அதன் இலைகளும் மனதை கொள்ளை கொள்கின்றன.

மேலும், இலையுதிர் காலத்தில் இங்கு உள்ள மரங்களின் இலைகள் நிறம் மாறி, வானவில்லாய் காட்சி தரும் என பூங்கா பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர். அதை என்னால் பார்க்க முடியாது என்றாலும், ஒரு சில மரங்களில் இந்த மாற்றத்தை காண முடிந்ததில் மகிழ்ச்சி.

பச்சை கம்பளம் விரித்த நந்தவனத்தில் பூத்து குலுங்கும் பூக்களையும், விண்ணைத் தொடும் மரங்களின் இயற்கை எழில் கொஞ்சும் அழகையும் காண வருடம்தோறும் 3லட்சம் பேர் வந்து செல்வதாக சொல்கின்றனர். இயற்கை அன்னையின் கொடையை ஆரதிக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு, இப் பூங்கா ஓர் வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது.