ஆதியாகமம் மற்றும் பணத்தின் தோற்றம்

2017 ஆம் ஆண்டில் பிட்காய்ன்களின் மதிப்பு உச்சத்தை எட்டிவிட்ட நிலையில் முதலீட்டாளர்களிடம் இது
குறித்து சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. மாறாக அரசாங்க ஆதரவு எதுவும் இல்லாமல்
சொத்தினை டிஜிட்டல் முறையில் இப்படி முதலீடு செய்வது வேடிக்கையாக தெரியலாம். மேலும் பிட்
காய்ன்களின் மதிப்பு அதிகரிக்கும் போக்கு டுலிப் மானியா அல்லது Dot-Com Bubble உடன் ஒப்பிடத்
தூண்டுகிறது. பிட்காய்ன்களில் முதலீடு செய்வதில் பல குறிப்பிடத்தக்க ஆபத்துகள் இருந்தாலும், அதே
சமயம் சில மகத்தான வாய்ப்புகளும் இதில் அடங்கியுள்ளது என்பதை மறுக்கமுடியாது.

தொடக்கம்

உலக வரலாற்றில் தொலைதூரத்தில் இருக்கும் மக்களுக்கிடையே நம்பத்தகுந்த வங்கி அல்லது அரசாங்கம்
போன்ற அமைப்பு எதுவுமின்றி மதிப்பு மாற்றம் இதுபோல் நடந்தது கிடையாது. 2008ல் சடோஷி
நகமோடோ எனும் அடையாளத்தை வெளியிடாத நபர், கணினி அறிவியலில் நீண்ட நாள் பிரச்சனையாக
பார்க்கப்பட்டு வந்த Byzantine General’s சிக்கலுக்கு 9 பக்கங்கள் கொண்ட தீர்வினை வெளியிட்டார். இந்த
அடையாளம் தெரியாத நபர் தான் பிட்காய்ன்களை அறிமுகப்படுத்தினார். இதனால் உலகில் முதன்
முறையாக தொலைதூரத்திலிருக்கும் இருவருக்கிடையே மதிப்பு பரிமாற்றம் அதிவேகத்தில் நம்பிக்கையற்ற
வழியில் நடைபெற்றது. பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியலில் பிட் காய்ன்களின் உருவாக்கம்
என்பது மிகவும் ஆழ்ந்த சிந்தனையாகும். இப்படிப்பட்ட சிந்தனையை செயல்படுத்திய நகமோடோ ஒரே
சமயத்தில் பொருளாதாரத்தில் நோபல் பரிசு மற்றும் டூரிங் விருது இரண்டையும் பெறக்கூடிய
தகுதியுடையவர்.
ஒரு முதலீட்டாளருக்கு பிட்காய்ன்கள், பிட்காய்ன் நெட்வொர்க்குகளின் மூலம் 'மைனிங்' எனும்
செயல்முறையால் டிஜிட்டல் டோக்கன்களாக பரிமாற்றம் செய்யப்படுகிறது. வடிவமைப்பு மூலம், 21
மில்லியன் பிட்காய்ன்கள் மட்டுமே உள்ளது மற்றும் அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே உள்ளன -
எழுதும் நேரத்தில் சுமார் 16.8 மில்லியன் பிட்காய்ன்கள் ஏற்கனவே ‘மைன்’ செய்யப்பட்டது. ஒவ்வொரு
நான்கு வருடங்களுக்கும் மைனிங்ல் உற்பத்தி செய்யப்படும் பிட்காய்ன்கள் எண்ணிக்கை பாதியாகிறது. …

About

Vijay Boyapati

Tu ne cede malis, sed contra audentior ito

Get the Medium app

A button that says 'Download on the App Store', and if clicked it will lead you to the iOS App store
A button that says 'Get it on, Google Play', and if clicked it will lead you to the Google Play store