'ஆதி யோகி' என்னும் செக்யூலர் சிவன்
Amaruvi Devanathan
1

அண்ணா நமஸ்காரம்

நீங்கள் ஈஷா யோகா மையம் சென்றதுண்டா அண்ணா ? செல்லவில்லை என்றால் ஒருமுறை செல்ல வேண்டி பிரார்த்திக்கிறேன்

சென்றிருந்தால் , அங்கு “தியானலிங்கம் “, “பைரவி”, ஹரன் , ருத்திரன் , சதாசிவன் , நாகா தேவன் போன்ற பல தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன

ஆதி யோகி என்பது கூட சிவன் யோகா குருவாக அமர்ந்தபோது அவனை அழைக்கும் பெயர்

எப்படி தென்திசை நோக்கி அமர்வதால் தக்ஷிணாமூர்த்தி ஆனாரோ — அப்படியே முதலில் யோகா ஞானம் அருளியதால் ஆதி சிவன் — “ஆதி யோகி” ஆனான்

சிவன் தான் ஆதி யோகி என்று சொல்ல சத்குரு எப்பொழுதும் தயங்கியதே இல்லை

இந்த பெயரின் நோக்கம் என்னவென்று நான் இப்பொழுது சொல்கிறேன் . இது சத்குரு சொன்ன விளக்கம் தான்.

2012 இல் யோகாவின் தோற்றம் அமெரிக்காவில் காலிஃபோர்னியாவில் நிகழ்ந்ததாக ஒரு ப்ரசித்திபெற்ற வார இதழ் வெளியிட்டது.

பின்பு ஒரு ஐரோப்பிய இதழ் யோகா “மடோனா” அவர்களின் கண்டுபிடிப்பு என்று உரைத்தது.

இதைத்தொடர்ந்து , யோகாவின் ஆரம்பம் “Source of yoga” — முதல் யோகியான ஷிவா மூலமாக வந்தது என உணர்த்தவே இந்த நாமம்

இந்த மஹாசிவராத்ரி அன்று சத்குரு ஒரு புத்தகமும் வெளியிடுகிறார் . புத்தகத்தின் பெயர் “ஆதியோகி — “The Source Of Yoga”

அதில் — சிவபுராணக்கதைகள் — மற்றும் — யோகா கலாச்சார விளக்கங்கள் — அனைத்தும் உள்ளது.

நாம் ஹிந்துக்களே சத்குரு போன்றவர்களை துவேஷித்தால், பிற மதத்தவர்களுக்கு அது கிள்ளுக்கீரை ஆகாதா ???

சத்குரு அவர்களால் எத்தனையோ வெளிநாட்டவர் , இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர் இன்று இந்திய கலாச்சார பெருமையை உணர்கின்றனர்

எல்லாவற்றிக்கும் மேலாக , நமது இன்றைய இளைஞர்கள் பாரம்பரிய நாட்டம் கொள்ள சத்குரு ஒரு மிகப்பெரிய காரணம் தானே ?

சற்று யோசிப்போம் அண்ணா

Like what you read? Give Vijayaragavan Chakrapani a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.