#தூக்கம் கலைந்தது
எப்போதும் தூக்கத்திற்கு பிறகான விழிப்பில் இருக்கும் சோர்வு இன்றில்லாமலிருந்தது.
சுறுசுறுப்பாக வெளியே வந்தவன் காற்றில் மிதக்கலானேன்.
வெண்பனி மேகங்களை கலைத்துவிளையாடிபடி நீள் வானின் நீலத்துடன் கரைந்தேன்.
அதோ தெரியும் மலையுச்சியின் மீதிரங்கினேன்.. ஜிவ்வென்ற தென்றலில் கலந்துபோனேன்.
மஞ்சள்வானம் அள்ளி பூசிக்கொண்டதுடன் பனிமலைகளில் பாய்ந்தோடினேன்.
அடுக்கடுக்கான மலைபள்ளங்களிலும் ஊஞ்சல் கட்டியாடியவனை காட்டின் கரும்பச்சை கட்டியனைத்தது.
சிங்கங்களுடனும் சிறுத்தைகளுடன் மான்களுடனும் மயில்களுடனும் முயல்களுடன் முதலைகளுடனும் ஒரு ஸ்பரிசம்.
அங்கிருந்து கிளம்பியவன் நின்ற இடம் ஒரு கடல்மடி.. அந்த மாபெரும் உலகத்தில்.. மர்ம பல்லுயிரிகளுடன் ஒரு பயணம்.
ஆழ்கடலிலும் அழகு தீவுகளிலும் உலவிக்கொண்டிருந்தவன் விருட்டென விண்நோக்கி பறந்து வான்கிழித்து கடந்தபோது நான் வாழ்ந்துமுடித்திருந்தேன்.!