“ராக்கம்மா கைய்யதட்டு”

தளபதி படத்துல ராஜா வின் ஆறுநிமிஷம் நாற்பத்து ஏழு நொடி ஓடக்கூடிய இந்த பாட்டுல ஆடியோ அற்புதம்னா வீடியோ அதிஅற்புதம்!

அழகான ஆர்பாட்டமில்லாத நடனஅமைப்பு, கட்டிமுடிக்கபடாத அல்லது பழைய நான்கு பெரிய தூண்கள் இருக்கும் கட்டிடம்.. கற் கோவில் சுற்றுச்சுவர் என படமாக்கபட்ட லோகேஷன்.. கற்வளையமிட்டு விறகு குவித்து குளிர்காய நெருப்பு மூட்டிய இரவு நேரம்.. அடிக்கடி முன்னிருத்தி காட்டப்படும் மஞ்சள்,சிகப்பு துணி/சேலைகள்.. முக்கால்வாசி அல்லது பாதிமுகத்தையே காட்டும் மஞ்சள் விளக்குகள். விளக்குகள் நேர் எதிரே வைக்காமல் கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் எரியவிடபட்ட நேர்த்தி.. எண்ணிவியக்கும் வரிகள்.. காதுகுளிரும் இசை.. அளந்து தெளித்த முகபாவனைகள்.. இரு வேறு பாடல் முறை.. இருவேறு நடன அமைப்பு.. இருவேறு கொண்டாட்டம்.. இரு வேறு துருவங்களுக்கிடையே நிகழும் காதல் சந்திப்பு.. இத்தனையும் சேர்த்து செதுக்கிய பாடல்.

எல்லாத்துக்கும் மேல தலைவரோட ஸ்கீரின் பிரசன்ஸ்.. பொதுவா காதல் கோபம்,வெட்கம்,சிரிப்பு,அழுகை இதையெல்லாம் திரைல ஒருத்தர் உணர்ந்து வெளிகாட்டும் போது அத பாக்றவங்களுக்கும் அது பரவும். அதுபோல தலைவர் ‘அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்..’ ங்ற லைனுக்கு சட்டுனு திரும்புற அவரோட வேகம் விறுவிறுப்பும் நம்மல தொத்திக்கும்.

ராஜா தன்னை ராஜாவ ஒவ்வொரு பாடலின் ஏதோ ஒரு மூலையில் தைச்சி வச்சிருப்பாரு. அந்த இடம் கேட்டுணரும்போது ஆட்டோமேட்டிக்க ராஜானா ராஜாதான்யானு நிறைய பேர் சொல்லி கேட்ருப்போம். அந்த மாதிரி இந்த பாட்ல.. 5.47 லருந்து 6.48 வரைக்கும் வெறும் சொடக்கு சத்தம் அப்றம் மெலிதான ஹம்மிங் குடுத்து நிரூபிச்சிருப்பார். ஷோபானாவோட சிலைஅசைவு நடனத்தை தலைவர் கவனிக்கும்போது இடையிடையே மின்னல் வெட்டும் பார்வையில் சொக்கிபோகும்போது பாட்டு முடியும்.

தளபதி படத்துலதான் தலைவர் என்ன ஒரு நடிப்ப குடுத்துருப்பாரு.. தலைவரோ நிறைய படங்கள்ல நடிப்பின் உச்சம் தொட்டாலும் தளபதி ஒரு கிரீடம்! கமலே அந்த நடிப்பு முன்னாடி பிச்ச வாங்கனும்.

“நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா..

உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா..

அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்.. 🎵🎶

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.