Dragon : The bruce lee story

யத்தேச்சையா ஒரு சேனல்ல பாத்தேன்.. அப்டியே முழு படமும் பாத்துட்டுதான் எழுந்தேன்.

Bruce lee யோட பலம் அவரது வேகமோ உடல்வலிமையோ இல்ல.. அவரோட கண்ணுதான்னு சொல்வாங்க. Sharp & strong eyes.

எப்பவுமே அவரபத்தி படிக்கிறதும் தெரிஞ்சிகறதுனா அவ்ளோ ஆர்வம்.

புரூஸ்லீனு சொன்னதும் சின்ன வயசுல கராத்தே க்ளாஸ்ல வழியா ஸ்கூல் போகும் போது வைக்கபட்டிருந்த அவரோட பெரிய பேனர்தான் ஞாபகம் வரும். அப்பவே அவரபத்தி கொஞ்சம் தெரிஞ்சிகிட்டேன்.

மகத்தான மனுஷன்.. 33 வயசுக்குள்ள தன்னோட தனித்தன்மையால மொத்த உலகத்தையே ஆண்டவர்.

சுருங்க சொல்லும் வரலாறுகளில் வெற்றிகளே அதிகம் நிரம்பியிருக்கும் என்பது நியதி.. மனதளவில் உடலளவில் அவர் பட்ட கஷ்டம் எல்லாம் அவரபத்தி எடுக்கபட்ட நிறைய படங்கள்ல சொல்லபடல.. இந்தபடமும் அப்டிதான் எடுத்துருக்காங்க.. என்ன ஒன்னு அவர அசகாயசூரனா காட்டாம சாதாரணமனுஷனா காட்டிருக்காங்க.

1993 ல வந்த இந்த படத்துல புரூஸ் லீ கேரக்டர்ல லீ மாதிரியே உருவமைப்பு கொண்ட ஒருத்தர் நடிச்சிருக்கார்.. கிட்டதட்ட அவரமாதிரினாலும் சில இடங்கள்ல ஓவர்ஆக்டிங்கோனு தோணுது. லீ ரொம்ப பொறுமைசாலி.. அது இதுல மிஸ்ஸிங்.

அடுத்து அவர் மனைவியா நடிச்சிருந்தவங்க அழகு + கேரக்டர் கச்சிதம்! கண்ணுக்குள்ளவே நிக்கிறாங்க.

இந்த படம் ரொம்ப ஸ்லோ.. பாக்றதுக்கு அவ்ளோ ஒர்த்தானு தெர்ல.. ஆனா அவரோட வரலாற நியாபகபடுத்திடுச்சி. வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா பாருங்க.

அறுபதுகள் எழுபதுகள்ல இந்தமாதிரி ஆக்சன் சினிமாவ அதுவும் ஒரு புது மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைய நம்பி புதுமுகத்த வச்சி ஹாலிவுட்ல எடுக்குறது ரொம்பவே கஷ்டம். ஏன்னா எல்லாமே ஒரு டேக்லயே நடிச்சாகனும். எவ்ளோ கஷ்டமானா சண்டை காட்சியாருந்தாலும் இதே நிலமதான். அதுபோக சீன முகஅமைப்பு கொண்ட ஒரு நடிகர அமெரிக்க மக்கள் ஹீரோவா ஏற்றுக்கொள்வாங்களானு பெரிய குழப்பமே இருந்திச்சி. ஆனா இதையெல்லாம் புரூஸ் லி நொறுக்கி தள்ளிட்டார்.

You just wait. I’m going to be the biggest Chinese Star in the world. -Bruce lee

மனுஷன் தான் என்னவாகனும் நெனைச்சாரோ அதுவாவே ஆனார். ஆனா அவர சுத்தி இருந்தவங்கள தப்பா எடைபோட்டுட்டாருனுதான் சொல்லனும்.

Enter the dragon தான் உலக அளவுல இந்த நாள் வரை Most successful martial arts movie ! அதுதான் Bruce lee யோட கடைசி படமும் கூட.. 1973 Aug ல இந்த படம் வெளிவந்துச்சி. ஆனா லீ 1973 July 20 மரணடைந்தார். வலி நிவாரணி மருந்து அதிகபடியா கொடுக்கபட்டு தீவிர கோமாவில் இறந்துட்டார்னு சொல்லபடும் லீ யின் மரணத்தில் இப்பவரைக்கும் மர்மம் நீடிச்சிகிட்டேதான் இருக்கு. அவரது மகனும் அவர பின்பற்றி சினிமாதுறைக்கு வந்து ஒரு சினிமா சூட்டிங் விபத்துல இறந்தது இன்னொரு சோகம்.

மீடியா வளர்ச்சியில்லாத அந்த நாட்களில் சொந்த குருமார்களின் எதிர்ப்பையும் மீறி தனக்கு பயிற்றுவிக்க பட்ட கலைல நிறைய வழிமுறைகள் தன்னோட வேகத்த குறைக்கிதுனு அத மாற்றியமைத்து எவ்வளவு பெரிய வீரனாயினும் அவன 60 Sec ல தோக்கடிக்கமுடியும் நிரூபிச்சி ஒரு புது Martial arts உருவாக்க எவ்வளவு மெனக்கெட வேண்டியிருந்துருக்கும்.

இப்பவும் யூடியூப்ல அவரோட வீடியோஸ்லாம் பாக்றப்ப மனசு ஒருமாதிரியாகிரும்.. வேகமான..துடிப்பான.. வலிமையான.. அந்த மனுஷன் எவ்ளோ சீக்கிரம் காணாம போயிட்டார்.

அவர பத்தி தெரிஞ்சிகனும்னா நிறைய Documentary flims iruku பாருங்க..

Star of the century யோட வாழ்கைய படிங்க.

Be water my friend -Bruce lee

https://youtu.be/5ZQjRoaPaPg

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.