மாநகரம்

பிரச்சனைகளை நீயாகவே உருவாக்கிக் கொண்டாலும், பிரச்சனைகளை கண்டும் காணாதது போல நீ இருந்தாலும், பிரச்சனைகளே வேண்டாம் என நீ ஒதுங்கி இருந்தாலும், எப்போதும் பிரச்சனைகள் உன்னை துரத்திக் கொண்டேதான் இருக்கும்.., அதிலிருந்து தப்பிக்க நினைத்து ஓடிக்கொண்டே இருக்காமல், அதை எதிர்த்து நின்றால்.., அப்போதும் பிரச்சனைகள் உன்னை துரத்திக்கொண்டேதான் இருக்கும்.. — மாநகரம் படம் மூலம் நான் உணர்ந்த விஷயம் இதுதான்..,

சென்னைக்கு புதிது, அதன் ரூட் எதுவும் தெரியாது என்பதை மறைத்து, சென்னை ரூட் தெரியும் என்று பொய் சொல்லி வேலைக்கு சேர்ந்ததால் மாட்டிக்கொள்ளும் சார்லி.., மிகப்பெரிய செய்கை செய்பவன் என பில்டப்புடன் வந்து, பையனை மாற்றி கடத்திவிட்டு, கடத்தச் சொன்னவர்களிடமே மாட்டிக் கொண்டு முழிக்கும் முனீஸ்காந்த்..

தன் காதலி மீது ஆசிட் வீசுவேன் என்று எச்சரித்தவன் மீது, நான் ஆசிட் வீசுவேன் என்று கிளம்பி, பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளும் சந்தீப் கிருஷ்னன், உன் பையன கடத்தீட்டேன் என்று சொன்னவர்களை சிரித்து அவமானப்படுத்தியதால், அவர்கள் சொல்லும் இடங்களுக்கெல்லாம் தனியாய் அழைந்து திரியும் வில்லன்..

பெரிய ரவுடியின் குழந்தை கைக்கு கிடைத்ததும், அதை வைத்து பணம் பண்ணலாம் என நிகழ்வுகளை தனக்கு சாதகமாய் பயன்படுத்தும் போலீஸ் அதிகாரி.., தப்பான பையனை கடத்தியதை அறிந்து, சற்று பயப்பட்டு, பின் அதை வைத்தே பணம் பிடுங்க நிணைத்த அந்த குழந்தை கடத்தல் காரர்கள்..

முதலில் பிரச்சனைகளைக் கண்டு முகத்தை திருப்பிக் கொண்டு செல்பவன்,பிரச்சனைகள நாம தட்டிக் கேட்டுருக்கோமா சார்.. என்று சார்லி கேட்டதை நிணைத்து, தைரியமாய் பிரச்சனையை எதிர்கொள்ளும் ஸ்ரீ.., உயரதிகாரியின் தவறுகளை தட்டிக் கேக்காமல் பணிந்து செல்பவன், இறுதியில் அவரையே எதிர்த்து நடந்தவைகளை மாற்றிச் சொல்லி குழந்தையையும், சந்தீப் கிருஷ்ணனையும் காப்பாற்றும் கான்ஸ்டபிள்..

இறுதியில், நீ நல்லவனாய் இருந்தாலும், கெட்டவனாய் இருந்தாலும்.., பிரச்ச்னைகள் உன்னை துரத்திக்கொண்டேதான் இருக்கும்….